போதையில் அத்துமீற முயன்ற காவலர்.. ஆப்படித்த உயர் அதிகாரிகள்.. திக்., திக்., சம்பவம்.!



Drunk Policeman Suspended After Allegedly Attempting to Misbehave With Woman in Chennai

சட்டவிரோத மதுபான விற்பனை குறித்து விசாரிக்கச் சென்ற காவலர், பாலியல் புகாருக்கு ஆளாகி பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.

அத்துமீற முயற்சி:

Chennai Cop Suspended:  சென்னையில் உள்ள ராயபுரம், ஐஸ்ஹவுஸ் காவல் நிலையத்தில், காவலராக வேலை பார்த்து வருபவர் சூர்யா. இவர் நேற்று இரவு நேரத்தில் மதுபோதையில், ஐஸ்ஹவுஸ் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் பெண்ணின் வீட்டுக்குச் சென்றுள்ளார். காவலர் சீருடையில் சென்றவர், தனது மேல் சட்டையை கழட்டிவிட்டு பெண்ணிடம் அத்துமீற முயற்சித்து இருக்கிறார்.

இதையும் படிங்க: IAS அதிகாரியின் மகள் வரதட்சணை கொடுமையால் தற்கொலை.. 8 மாதத்தில் கசந்த காதல் திருமணம்.!

திரண்டுவந்த பொதுமக்கள்:

இதனால் அதிர்ச்சியடைந்த பெண் காவலரை எச்சரித்தவாறு சம்பவத்தை வீடியோ பதிவு செய்து இருக்கிறார். மேலும், காவலரிடம் இருந்து தப்பி கதவை பூட்டிவிட்டு, அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்துள்ளார். பொதுமக்கள் அனைவரும் திரண்டு வந்து காவலரை பிடித்து இருக்கின்றனர். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த ஐஸ்ஹவுஸ் காவல்நிலைய அதிகாரிகள், நேரில் சென்று விசாரித்துள்ளனர்.

chennai

பணியிடைநீக்கம்:

அப்போது, பெண்மணி சட்டவிரோத செயலில் ஈடுபட்டது குறித்து தகவல் கிடைத்து விசாரிக்க வந்ததாக காவலர் சூர்யா விளக்கம் அளித்துள்ளார். தொடர் விசாரணைக்குப்பின் காவலர் சூர்யா பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். பெண்ணிடம் அத்துமீற முயன்றதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு காவலர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், துறை ரீதியான விசாரணையும் நடந்து வருகிறது.

இதையும் படிங்க: காதல் திருமணம் கசந்ததால் கள்ளக்காதல்.. வீடெல்லாம் ரத்த வெள்ளம்.. அரங்கேறிய பயங்கரம்.!