2 படங்களுக்கு ரூ.957 கோடி சம்பளம்... ஹாலிவுட்டையே மிரள வைத்த ராபர்ட் டௌனி ஜூனியர்!



Robert Downey Jr Earns Rs 957 Crore for Two Avengers Films

'அவென்ஜர்ஸ்: டூம்ஸ்டே' மற்றும் 'அவென்ஜர்ஸ்: சீக்ரெட் வார்ஸ்' ஆகிய இரண்டு மார்வெல் படங்களில் நடிப்பதற்காக ஹாலிவுட் நடிகர் ராபர்ட் டௌனி ஜூனியருக்கு 100 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.957 கோடி) சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸில் Ironman கதாபாத்திரத்தின் மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களை கவர்ந்த ராபர்ட் டௌனி ஜூனியர், இந்த இரண்டு படங்களில் டாக்டர் டூம் (Doctor Doom) கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Robert Downey Jr

இதுவரை அவென்ஜர்ஸ் மற்றும் மார்வெல் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ராபர்ட் டௌனி ஜூனியர் 500 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக சம்பாதித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது புதிய சம்பள விவரம் தற்போது ஹாலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: வேற லெவல்...கொண்டாட்டத்தில் நேரு ஸ்டேடியம்! விஜய் பதவியேற்பு விழாவிற்கு அம்மாவுடன் மாஸ் எண்ட்ரி கொடுத்த த்ரிஷா.... போலீஸ் குவிப்பு!!!

இதையும் படிங்க: பச்சைப்புல் 43 ஆயிரம்.. ரசிக வெறியால் கல்லா கட்டிய FIFA..!