அட்ஜஸ்ட்மென்ட் செய்யணும்.... அப்போ தான் இந்த ரோல்! அப்ளிக்கேஷன்லையே அது இருக்கு! அய்யனார் துணை சீரியல் நடிகை ரேஷ்மா ஓபன் டாக்.!!!



actress-reshma-speaks-about-casting-couch-experience

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'அய்யனார் துணை', 'பாரதி கண்ணம்மா' உள்ளிட்ட தொடர்களில் நடித்து வரும் ரேஷ்மா, திரைத்துறையில் வாய்ப்புகளைத் தேடிய ஆரம்ப காலத்தில் சந்தித்த சவால்கள் குறித்து பகிர்ந்துள்ள காணொளி சமூக வலைதளங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

வாய்ப்பு தேடிய காலத்தில் சந்தித்த அனுபவம்

ரேஷ்மா பேசியதன்படி, திரைத்துறையில் சிறிய கதாபாத்திரங்களுக்குக் கூட வாய்ப்பு தேடியபோது, சில மேனேஜர்கள் 'அட்ஜஸ்ட்மென்ட்' செய்ய முடியுமா என்று நேரடியாகக் கேட்டதாக தெரிவித்துள்ளார். மேலும், நடிகைகளுக்கான விண்ணப்பப் படிவங்களிலேயே இதுபோன்ற கேள்விகள் இடம்பெற்றிருந்ததாகவும், அதற்கு சம்மதிக்காத காரணத்தால் பல வாய்ப்புகளை இழந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: பணக்காரரை மட்டும் பார்த்து திருமணம் செய்யாதீங்க.... CEO வெளியிட்ட எமோஷனல் பதவி!!!

தாயின் ஆதரவே திருப்புமுனை

தொடர்ச்சியாக வாய்ப்புகள் கிடைக்காமல் மன அழுத்தத்தில் இருந்த காலத்தில், தனது தாயார் அளித்த பொருளாதார மற்றும் மனரீதியான ஆதரவுதான் தன்னை முன்னேறச் செய்ததாக ரேஷ்மா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். அதன்பிறகு நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் வெப் சீரிஸ், குறும்படங்கள் மற்றும் சின்னத்திரை தொடர்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இணையத்தில் ஆதரவு கருத்துகள்

ரேஷ்மாவின் அட்ஜஸ்ட்மென்ட் குறித்த இந்தப் பகிர்வு இணையத்தில் பரவலாக கவனம் பெற்றுள்ளது. பெண்கள் பணியிடங்களில் எதிர்கொள்ளும் இதுபோன்ற பிரச்சினைகள் குறித்து உடனடியாக வெளிப்படையாகப் பேச வேண்டும் என்றும், அதன்மூலம் மற்ற பெண்களுக்கும் பாதுகாப்பான சூழல் உருவாகும் என்றும் பலர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

இதையும் படிங்க: இது மிக முக்கியமான நாள்! "வேலையை விடு .. பையன் கூட போ" இந்திய ஊழியருக்கு வெளிநாட்டு மேலாளர் போட்ட அதிரடி உத்தரவு! நெகிழ்ச்சியில் வீடியோ வெளியிட்ட ஊழியர்..!!!