தவெக-வுக்கு செக் வைத்த அதிமுக! விஜய் பாணியை கையில் எடுத்து காய் நகர்த்தும் எடப்பாடி..!!!



eps-plan-to-bring-back-former-aiadmk-leaders

அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த நிர்வாகிகளை மீண்டும் தாய் கட்சிக்குக் கொண்டுவர எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார் . தவெகவில் எதிர்பார்த்த அங்கீகாரமும் பொறுப்புகளும் கிடைக்காமல் அதிருப்தியில் இருப்பவர்களைக் கண்டறிந்து பேசுவதற்காக ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அதிருப்தி நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த திட்டம்

தவெகவில் இணைந்த முன்னாள் அதிமுக நிர்வாகிகளில் யார் அதிருப்தியில் உள்ளனர் என்பதை இந்தக் குழுவினர் கண்டறிய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர்களை நேரில் சந்தித்து, மீண்டும் அதிமுகவுக்கு வந்தால் உரிய மரியாதையும் பொறுப்புகளும் வழங்கப்படும் என உறுதியளித்து பேச்சுவார்த்தை நடத்தவும் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: திடீர் ஷாக்கில் திமுக..! எடப்பாடி முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைந்த முக்கிய புள்ளி...!!!

ஐந்து பேர் கொண்ட உயர்மட்டக் குழு

இந்தப் பணிக்காக எடப்பாடி பழனிசாமி ஐந்து பேர் அடங்கிய உயர்மட்டக் குழுவை அமைத்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. எனினும், குழுவில் இடம்பெற்றுள்ளவர்களின் பெயர்கள் மற்றும் பேச்சுவார்த்தை தொடங்கும் தேதி குறித்த அதிகாரப்பூர்வ விவரங்கள் வெளியாகவில்லை.

தேர்தலை முன்னிட்டு கட்சியை வலுப்படுத்தும் முயற்சி

சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் நிலையில், கட்சியில் இருந்து விலகிய முக்கிய நிர்வாகிகளை மீண்டும் இணைப்பதன் மூலம் அமைப்பை வலுப்படுத்த அதிமுக தலைமை முயற்சிப்பதாகக் கூறப்படுகிறது. அதே நேரத்தில், தவெகவில் இணைந்த நிர்வாகிகளை மீண்டும் அழைத்து வரும் இந்த முயற்சி இரு கட்சிகளின் அரசியல் வட்டாரங்களிலும் கவனத்தைப் பெற்றுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தைகள் எந்த அளவுக்கு பலன் தரும் என்பது அடுத்தடுத்த நாட்களில் தெரியவரும்.

 

இதையும் படிங்க: இத யாரும் எதிர்பார்க்கல.... எடப்பாடிக்கே அதிர்ச்சி கொடுத்த எஸ்.பி. வேலுமணி...! அதிமுகவில் அடுத்தடுத்து அதிரடி திருப்பம்..!!!