கிசுகிசு வீடியோ! ஒரே காருல, ஒரே கலருல பட்டு வேட்டி சட்டை, இங்குட்டு புடவையுடன் த்ரிஷா! சர்ச்சைக்கு நடுவே இப்படி ஒரு வருகை.... அதிர வைக்கும் அப்படி ஒரு காட்சி!
கோலிவுட் வட்டாரத்தில் கடந்த சில நாட்களாக பரபரப்பை ஏற்படுத்தி வரும் செய்திகளில் ஒன்று நடிகர் விஜயைச் சுற்றியுள்ள வதந்திகள்தான். இந்த நிலையில், சென்னையில் நடைபெற்ற ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் விஜய் – த்ரிஷா இணைந்து தோன்றிய சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
சென்னையில் நடந்த திருமண வரவேற்பு
சென்னை திருவான்மியூரில் ஏஜிஎஸ் நிறுவன தயாரிப்பாளர் கல்பாத்தி சுரேஷின் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரையுலகைச் சேர்ந்த பல பிரபலங்கள் கலந்துகொண்டனர். அதில் நடிகர் விஜய்யும் நடிகை த்ரிஷாவும் கலந்து கொண்டது ரசிகர்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்தது.
வீடியோ வைரல்
நிகழ்ச்சிக்கு விஜய் பாரம்பரியமான பட்டு வேட்டி மற்றும் சட்டை அணிந்து வந்திருந்தார். அவருடன் பொருந்தும் வகையில் நடிகை த்ரிஷாவும் அழகான உடையில் கலந்து கொண்டார். இருவரும் ஒன்றாக நடந்து வரும் தருணம் பதிவு செய்யப்பட்ட வீடியோ தற்போது வைரல் வீடியோவாக சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதையும் படிங்க: திடீரென சாமி வந்து கண்ணீர் விட்டு ஆடிய நடிகை சுதா சந்திரன்! ஆன்மீக பரவசத்தில் அதிர்ந்துபோன கூட்டம்.....வைரலாகும் வீடியோ!
ரசிகர்களின் கருத்துகள்
நீண்ட நாட்களுக்கு பிறகு பொதுநிகழ்ச்சியில் விஜய் மற்றும் த்ரிஷா இணைந்து தோன்றியதை பார்த்த ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். "இவர்களின் கெமிஸ்ட்ரி இன்னும் அதே மாதிரிதான்" என்று பலரும் பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே விஜய் – த்ரிஷா குறித்து பல்வேறு கிசுகிசுக்கள் பரவி வரும் நிலையில், இந்த நிகழ்ச்சியில் இருவரும் ஒன்றாகக் கலந்து கொண்டது கோலிவுட் ரசிகர்களிடையே புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒரே காரில் ஒன்றாக வந்திறங்கிய தவெக தலைவர் விஜய், திரிஷா!#Vijay #Trisha #Marriagefunction #Viralvideo #TVKvijay #Newstamil24x7 pic.twitter.com/u8miibYs5R
— News Tamil 24×7 (@NewsTamilTV24x7) March 5, 2026