India US Trade Deal: இந்தியா-அமெரிக்கா ஒப்பந்தம்.. எதிர்க்கட்சிகளின் அமளி.. மத்திய அமைச்சர் விளக்கம்.!



India US Trade Deal Sparks Opposition Uproar Union Minister Piyush Goyal Responds

கடந்த சில மாதங்களாக இந்தியா-அமெரிக்கா இடையே நடந்த பொருளாதார பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் இந்திய எதிர்க்கட்சிகள் எதிர்ப்புக்குரல் தெரிவித்து வருவதால், மக்களவையில் முரண்பாடு தொடருகிறது.

இந்தியா-அமெரிக்கா இடையே நிலவி வந்த வர்த்தக பிரச்னையை தீர்க்கும் வகையில், ராஜாங்க ரீதியிலான பேச்சுவார்த்தைகள் கடந்த சில மாதங்களாக நடந்து வந்தன. அதனைத்தொடர்ந்து, இந்தியா மீது விதிக்கப்பட்ட 25% வரியை தளர்த்திய அமெரிக்கா, இந்திய பொருட்களுக்கு பரஸ்பரம் என்ற அடிப்படையில் 18% வரி விதிப்பதாக முடிவு செய்துள்ளது. மேலும், இந்தியா ரஷ்யாவுடன் எண்ணெய் ஒப்பந்தத்தை நிறுத்திவிட்டால், உக்ரைன் போர் முடிந்துவிடும். உக்ரைன் போரை நிறுத்தும் முடிவு இந்தியாவிடம் உள்ளது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்து இருக்கிறார்.

வர்த்தக ஒப்பந்தம் எதிர்காலத்துக்கானது:

இதனிடையே, இந்தியா - அமெரிக்கா இடையேயான ஒப்பந்தம் குறித்து ராகுல் காந்தி உட்பட காங்கிரஸ் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மக்களவை, மாநிலங்களவையில் இதனால் எதிர்ப்பு குரலும் எழுந்துள்ளன. இந்த விஷயம் குறித்து மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "பல மாதங்களுக்கு பின் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தம் இதுவரை மேற்கொண்டதில் முக்கியமானது ஆகும். வர்த்தக ஒப்பந்தம் அனைத்து மக்களுக்கும் பயன் வழங்கும். 

இதையும் படிங்க: #Breaking: தொடங்கியது பாராளுமன்ற கூட்டத்தொடர்.. பிரதமர் நரேந்திர மோடி முக்கிய கோரிக்கை.!

World news

காங்கிரஸ் ஆட்சியில் பொருளாதார வீழ்ச்சி நினைவிருக்கா?

இந்தியாவின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது. அமெரிக்காவுடன் நாம் கொண்டுள்ள ஒப்பந்தம் எதிர்காலத்துக்கு தேவையானது ஆகும். இந்த விஷயம் குறித்து ராகுல் காந்தி நாட்டு மக்களை தவறாக வழிநடத்தி வருகிறார். எதிர்க்கட்சிகள் மக்களவையில் செயல்படும் விதமும் கண்டிக்கத்தக்கது.  ராகுல் காந்தி கூறும் தகவலில் உண்மை ஏதும் இல்லை. காங்கிரஸின் ஆட்சியில் பொருளாதாரம் நலிவடைந்து இருந்ததை மக்கள் ஒருபோதும் மறக்கப்போவதில்லை" என பேசினார்.