அஜித்திற்கு நயன்தாரா கொடுத்த பெரிய சர்ப்ரைஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ காட்சி!



nayanthara-ajith-car-race-dubai-viral-video

தமிழ் சினிமா ரசிகர்களிடையே தற்போது அதிகம் பேசப்படுவது நடிகர் அஜித்தின் கார் ரேஸ் பயணம். இந்த போட்டியை நேரில் காண நடிகை நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் துபாய் சென்றுள்ள காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கார் ரேஸில் முழு கவனம் செலுத்தும் அஜித்

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் அஜித் தற்போது திரைப்படங்களில் இருந்து ஓய்வு பெற்று கார் ரேஸில் முழு கவனம் செலுத்தி வருகிறார். பல்வேறு நாடுகளில் நடைபெறும் போட்டிகளில் தனது ரேஸிங் டீமுடன் பங்கேற்று கார் ரேஸ் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

ஸ்பான்சர் விவகாரம் மற்றும் விமர்சனங்கள்

போட்டிகளின் போது நடிகர் அஜித் அணிந்திருந்த உடையில் பிரபல குளிர்பான நிறுவனத்தின் பெயர் இடம்பெற்றது. இதற்காக அவர் போஸ் கொடுத்தது சிலரிடையே விமர்சனங்களை ஏற்படுத்தியது. இருந்தாலும், அந்த விமர்சனங்களை பொருட்படுத்தாமல் அவர் தனது ரேஸிங் பயணத்தில் உற்சாகமாக ஈடுபட்டு வருகிறார்.

இதையும் படிங்க: சிரிச்ச முகம் உடனே மாறிப்போச்சு! ரசிகரின் செயலால் கடுப்பாகி அஜித் செய்ததை பாருங்க.... வைரலாகும் வீடியோ.!!

நயன்தாரா – அஜித் நட்பு

நடிகை நயன்தாரா, அஜித்துடன் இணைந்து நடித்த பல படங்களில் ரசிகர்களை கவர்ந்தவர். இவர்களின் ஜோடி திரையுலகில் எப்போதும் பிரபலமானதாகவே இருந்து வருகிறது. தற்போது தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் அஜித்தின் போட்டியை காண நயன்தாரா துபாய் சென்றுள்ளார்.

வைரலான சந்திப்பு காட்சி

துபாய் சென்ற நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியை நடிகர் அஜித் நேரில் சந்தித்து வரவேற்று உரையாடிய காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த தருணம் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திரை உலகைத் தாண்டி கார் ரேஸ் உலகிலும் அஜித் சாதனை படைத்து வருவது அவரது ரசிகர்களுக்கு பெருமை தரும் விஷயமாக உள்ளது. இந்த பயணத்தில் அவருக்கு ஆதரவாக நயன்தாரா – விக்னேஷ் சிவன் போன்ற நட்சத்திரங்கள் இருப்பது, அவரின் அஜித்தின்  கார் ரேசிங் வாழ்க்கைக்கு கூடுதல் ஊக்கமாக அமைந்துள்ளது.