Dhurandhar: The Revenge Teaser: 'இது புது இந்தியா' ரத்தம் தெறிக்க வெளியான துரந்தர் 2 படத்தின் டீசர்..!



Dhurandhar: The Revenge Teaser Out ‘This Is New India’ Dialogue Sparks Buzz

நீண்ட எதிர்பார்ப்புடன் காத்திருந்த துரந்தர் 2 டீசர் வெளியாகியுள்ளது. படத்தின் வெளியீடும் மார்ச் மாதம் என உறுதி செய்யப்பட்டுள்ளது. 

துரந்தர் - மிகப்பெரிய வெற்றி:

ஆதித்யா தார் இயக்கத்தில், ஜோதி தேஷ்பாண்டே தயாரிப்பில், ரன்வீர் சிங், அக்ஷய கண்ணா, சஞ்சய் தத், அர்ஜுன் ராம்பால், ஆர். மாதவன், சாரா அர்ஜுன், ராகேஷ் பேடி உட்பட பலர் நடிப்பில் 2025ம் ஆண்டில் வெளியான திரைப்படம் துரந்தர். இந்திய உளவாளியின் நகர்வுகளை மையப்படுத்தி வெளியாகிய திரைப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. ரூ.300 கோடி செலவில் உருவான படம், வெளியீடுக்கு பின் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதால் ரூ.1300 கோடி வசூல் செய்தது.

இதையும் படிங்க: Demonte Colony 3: திகில் பயணத்துக்கு ரெடியா? டிமான்டி படத்தின் 3ம் பாகம்.. ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் அப்டேட்! 

துரந்தர் 1 க்கு மிகப்பெரிய வரவேற்பு:

இரண்டு பாகமாக வெளியாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முழுவீச்சில் நடந்து முடிந்தன. இதனால் படத்தின் இரண்டாம் பாகம் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்து இருந்தது. முதல் பாகத்துக்கு கிடைத்த வரவேற்பு காரணமாக, இரண்டாம் பாகத்தை பல மொழிகளில் வெளியிட படக்குழு முடிவெடுத்து அதற்கான பணிகளையும் மேற்கொண்டு வந்தது. இந்தியாவில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களை மையப்படுத்திய காட்சிகளுடன் அதிரடி ஆக்சன், ரத்தம் தெறிக்கும் கொலை சம்பவங்கள் என படத்துக்கு A சென்சார் சான்றிதழும் வழங்கப்பட்டு இருந்தது.

Dhurandhar 2 The Revenge

துரந்தர் 2: தி ரிவெஞ்: 

இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகம் 19 மார்ச் 2026ல் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக, இரண்டாம் பாகம் அதிரடியாக வெளியாகிறது. இதன் டீசர் காட்சிகளும் தற்போது படக்குழு தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த காட்சியில் 'இது புதிய இந்தியா. எந்த வீட்டுக்குள்ளும் நுழைவோம், கொல்லவும் செய்வோம்' என்ற வசனமும் இடம்பெற்றுள்ளது. 

இதையும் படிங்க: Demonte Colony 3 Poster: டிமான்டி காலனி படத்தின் 3வது போஸ்டர் வெளியீடு.. கோடைக்கு மிரட்ட வரும் திகில்.!