Demonte Colony 3 Poster: டிமான்டி காலனி படத்தின் 3வது போஸ்டர் வெளியீடு.. கோடைக்கு மிரட்ட வரும் திகில்.!



Demonte Colony 3 Poster Released: Horror Thriller Fans Get a Spine-Chilling First Look

டிமான்டி காலனி படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.

டிமான்டி காலனி (Demonte Colony 1 & 2):

கடந்த 2015ம் ஆண்டு நடிகர்கள் அருள்நிதி, ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர், சிங்கம்புலி, யோகிபாபு உட்பட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் டிமான்டி காலனி. இப்படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அதனைத்தொடர்ந்து, டிமான்டி காலனி படத்தின் இரண்டாம் பாகம் கடந்த 2024ம் ஆண்டு வெளியானது. இந்த பாகத்தில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர், மீனாட்ஷி கோவிந்தன், அர்ச்சனா ரவிச்சந்திரன், அருண் பாண்டியன் உட்பட பலர் நடித்து இருந்தனர். 

இதையும் படிங்க: Demonte Colony 3: திகில் பயணத்துக்கு ரெடியா? டிமான்டி படத்தின் 3ம் பாகம்.. ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் அப்டேட்! 

டிமான்டி காலனி 3 (Demonte Colony 3): 

முதல் பாகத்தை காட்டிலும் இரண்டாவது பாகம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும், படத்தின் அடுத்த பாகத்துக்கான முன்னறிவிப்பு இருந்தது, புதிய பாகத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இதனிடையே, படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வந்தது. டிமான்டி காலனி படத்தின் 3ம் பாகம் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

Demonte Colony

டிமான்டி காலனி போஸ்டர்:

புத்தாண்டு 2026 கொண்டாட்டத்தை முன்னிட்டு படத்தின் புதிய போஸ்டரை இயக்குனர் அஜய் ஞானமுத்து வெளியிட்டு இருந்தார். இந்நிலையில், தற்போது படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்த பதிவில் இடம்பெற்ற தகவலின்படி அருள்நிதி படத்தில் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சாம் சிஎஸ் இசை அமைக்கிறார். பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. இந்த பாகத்துடன் டிமான்டி காலனி முடிவடையவுள்ளது. 

டிமான்டி காலனி படத்தின் 3வது போஸ்டர்: