Demonte Colony 3: திகில் பயணத்துக்கு ரெடியா? டிமான்டி படத்தின் 3ம் பாகம்.. ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் அப்டேட்! 



Demonte Colony 3 Movie Update

பேய்ப்பட விரும்பிகளுக்காக புத்தாண்டில் தித்திப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார் இயக்குனர் அஜய் ஞானமுத்து.

டிமான்டி காலனி (Demonte Colony 1):

கடந்த 2015ம் ஆண்டு நடிகர்கள் அருள்நிதி, ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர், சிங்கம்புலி, யோகிபாபு உட்பட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் டிமான்டி காலனி. இப்படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. பேய் படங்களில் திகிலூட்டும் வகையிலான கதை பலரையும் கவர்ந்தது. படமும் வெற்றிப்படம் ஆனது. இந்த படத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கி வழங்கி இருந்தார். 

இதையும் படிங்க: ரசிகர்கள் குதூகலம்! ஜெயிலர் 2 படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்.! வீடியோ வைரல்..!!

டிமான்டி காலனி 2 (Demonte Colony 2): 

அதனைத்தொடர்ந்து, டிமான்டி காலனி படத்தின் இரண்டாம் பாகம் கடந்த 2024ம் ஆண்டு வெளியானது. இந்த பாகத்தில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர், மீனாட்ஷி கோவிந்தன், அர்ச்சனா ரவிச்சந்திரன், அருண் பாண்டியன் உட்பட பலர் நடித்து இருந்தனர். இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியானாலும், முதல் படத்தை விட ஆதரவு சற்று குறைந்தே இருந்தது. 

டிமான்டி காலனி 3 (Demonte Colony 3): 

இந்நிலையில், டிமான்டி காலனி படத்தின் 3ம் பாகம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. புத்தாண்டு 2026ஐ முன்னிட்டு, இயக்குனர் அஜய் ஞானமுத்து தனது எக்ஸ் வலைப்பக்கத்தில் டிமான்டி காலனி படத்தின் 3ம் பாகம் குறித்த அறிவிப்பை போஸ்டராக வெளியிட்டு இருக்கிறார். இந்த பதிவில் இடம்பெற்ற தகவலின்படி அருள்நிதி படத்தில் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சாம் சிஎஸ் இசை அமைக்கிறார். பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. படம் கோடையை முன்னிட்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பாகத்துடன் டிமான்டி காலனி பாகம் முடிவடையவுள்ளது. இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.  

இயக்குனர் அஜய் ஞானமுத்து டிமான்டி காலனி 3ம் பாகம் குறித்து வெளியிட்ட அறிவிப்பு: 

இதையும் படிங்க: திரௌபதி 2 படத்தில் பாடியதற்காக மன்னிப்பு கேட்ட சின்மயி..  மோகன் ஜி போட்ட பதிவு.. நடந்தது என்ன?.!