ஷாக்.. திடீரென கிளம்பிய கரும்புகை..! அடுத்த நொடியே பற்றி எரிந்த வெற்றிப்பயண பேருந்து...! நொடிப்பொழுதில் உயிர் தப்பிய 30 பெண் பயணிகள்...!!!



thoothukudi-government-bus-catches-fire-kurumbur

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே திருச்செந்தூரில் இருந்து ஸ்ரீவைகுண்டம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து தீப்பற்றி எரிந்து நாசமானது. நேற்று மாலை நடந்த இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 30 பயணிகளும் அதிர்ஷ்டவசமாகக் காயமின்றி உயிர் தப்பினர். பேருந்தின் முன்பகுதியில் இருந்து புகை வெளியேறியதை கவனித்த ஓட்டுநர், உடனடியாக வாகனத்தை நிறுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

முன்பகுதியில் இருந்து கிளம்பிய கரும்புகை

திருச்செந்தூரில் இருந்து புறப்பட்ட அரசுப் பேருந்து குரும்பூர் அருகே சென்றுகொண்டிருந்தபோது, அதன் முன்பகுதியில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது. இதைக் கவனித்த ஓட்டுநர், பேருந்தைச் சாலையோரமாக நிறுத்தினார். தொடர்ந்து, உள்ளே இருந்த பயணிகள் அனைவரையும் உடனடியாகக் கீழே இறங்குமாறு எச்சரித்தார். இதையடுத்து 30 பேரும் பேருந்திலிருந்து பாதுகாப்பாக வெளியேறினர்.

இதையும் படிங்க: மகளிருக்கு 20 நாளில் 2 முறை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் பணம்...! தமிழக அரசின் ஹாப்பி நியூஷ்..!!!

சில நொடிகளில் தீயில் கருகிய பேருந்து

பயணிகள் அனைவரும் கீழே இறங்கிய சிறிது நேரத்திலேயே பேருந்து முழுவதும் தீ பரவியது. தீ மளமளவெனப் பரவியதால் வாகனம் முழுவதும் எரிந்து சேதமடைந்தது. ஓட்டுநர் சரியான நேரத்தில் செயல்பட்டு பயணிகளை வெளியேற்றியதால் உயிரிழப்போ காயமோ ஏற்படவில்லை.

தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை

விபத்துக்குள்ளான பேருந்து, பெண்கள் கட்டணமின்றிப் பயணிக்கும் மகளிர் விடியல் பயணத் திட்டத்தின் கீழ் இயக்கப்படும் அரசுப் பேருந்து எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. இதுதொடர்பாக குரும்பூர் போலீசார் மற்றும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் தீப்பற்றியதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது விசாரணைக்குப் பிறகே தெரியவரும்.

 

இதையும் படிங்க: தீபாவளி பரிசு! டாஸ்மாக் ஊழியர்களுக்கு இருமடங்கு மகிழ்ச்சி செய்தி... தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு..!!!