BREAKING: இன்னும் சற்றுநேரத்தில்..... ஜனநாயகன் படம் குறித்து விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்!!!



jananayagan-censor-case-supreme-court-hearing

தமிழ் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள விஜயின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடர்பான தணிக்கை விவகாரம் தற்போது உச்சநீதிமன்றத்தை எட்டியுள்ளது. இன்று நடைபெறவுள்ள விசாரணை, படத்தின் வெளியீட்டில் முக்கிய திருப்பமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

நடிகர் விஜய் நடிப்பில், இயக்குனர் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கக் கோரி தொடரப்பட்ட மேல்முறையீடு, இன்று காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

உயர்நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

முன்னதாக, சென்னை உயர்நீதிமன்றம் இப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டை விசாரித்த உயர்நீதிமன்ற அமர்வு, தனிநீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து, வழக்கை ஜனவரி 21-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இதையும் படிங்க: கொண்டாடும் ரசிகர்கள்! ஜனநாயகன் படத்தின் இரண்டாவது பாடலின் ப்ரோமோ வெளியீடு! ரசிகர்களின் உற்சாகம் உச்சத்தில்! அதிரடி வீடியோ இதோ!

உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

இந்த இடைக்கால தடையை நீக்கக் கோரி, படத்தின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, இன்று நடைபெறும் விசாரணை ‘ஜனநாயகன்’ படத்தின் வெளியீட்டிற்கு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

இருதரப்பு வாதங்கள்

ஏற்கனவே இந்த விவகாரத்தில் மத்திய தணிக்கை வாரியம் சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், நீதிமன்றம் இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த பின்னரே முடிவை அறிவிக்கும். இதனால், ஜனநாயகன் படத்தின் எதிர்காலம் குறித்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

பெரும் எதிர்பார்ப்புடன் உருவாகியுள்ள இந்த திரைப்படம், தணிக்கை சிக்கல்களைத் தாண்டி திட்டமிட்டபடி திரைக்கு வருமா என்பது இன்றைய விசாரணைக்குப் பிறகே தெரியவரும். விஜய் படத்துக்காக ரசிகர்கள் இந்த தீர்ப்பை ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.