Sabarimala Gold Theft Case: சபரிமலை தங்கத்திருட்டு வழக்கு: நடிகருக்கு அமலாக்கத்துறை சம்மன்.. திரையுலகில் பரபரப்பு.!
அமலாக்கத்துறை பிரபலமான நடிகருக்கு சம்மன் வழங்கியது தமிழ் & மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சொந்தமான தங்கம் திருடப்பட்டது குறித்து அமலாக்கத்துறை தற்போது விசாரணை நடத்தி வருகிறது. தற்போது, இந்த விவகாரத்தில் நடிகர் ஜெயராம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராக இரண்டாவது முறையாக சம்மன் வழங்கி இருக்கிறது. முன்னதாகவே ஜெயராமை அமலாக்கத்துறை அழைத்து விசாரணை நடத்தப்பட்டது.
நேரில் ஆஜராக உத்தரவு:
நடிகர் ஜெயராம் மற்றும் வழக்கின் முக்கிய குற்றவாளியான போட்டி எனப்படும் நபர், சபரிமலையில் இருந்து கொண்டு வரப்பட்ட தங்கத்தகடுக்கு பூஜை செய்த விடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதனைத்தொடர்ந்து ஜெயராமன் அமலாக்கத்துறை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார். அடுத்த வாரம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "மொபைல் வாங்கி தரட்டுமா... உன் சைஸ் என்ன"...? 17 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை.!! தனியார் கல்லூரி பேராசிரியர் கைது.!!

சம்பந்தம் இல்லை:
சபரிமலை தங்கம் விவகாரத்தில் ஹவாலா பணப்பரிமாற்றம் நடந்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. இதுதொடர்பாக பல இடங்களில் நடந்த சோதனையின் பேரில் ஜெயராமுக்கு சம்மன் வழங்கப்பட்டு இருக்கிறது. கடந்த முறை விசாரணைக்கு ஆஜராகியபோது, தங்கத்திருட்டுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.