ஒன்னும் இல்ல உங்களுக்கு... வீட்டுக்கு நல்லபடியா வருவீங்கன்னு நினைச்சேனே... இப்படி மூச்சு பேச்சின்றி வந்து இருக்கீங்களே! துடிதுடித்து அழுது உடைந்த பூர்ணிமா.. திரையுலகமே கண்ணீர்.!!!
தமிழ் திரையுலகின் கே பாக்யராஜ் (73) மாரடைப்பால் உயிரிழந்த செய்தி ரசிகர்களையும் திரையுலகினரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது உடல் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகிலுள்ள இல்லத்திற்கு கொண்டு வரப்பட்ட நிலையில், திரைத்துறையினர் மற்றும் ஏராளமான ரசிகர்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சோகத்தில் மூழ்கிய பாக்யராஜ் இல்லம்
மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் அவரது உடல் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டபோது அங்கு சோகமான சூழல் நிலவியது. இயக்குநர் பார்த்திபன், நடிகர் பாண்டியராஜன் உள்ளிட்ட பலரும் முதலில் வந்து அஞ்சலி செலுத்தினர். நடிகை ராதிகா மற்றும் பாக்யராஜின் மகன் சாந்தனு கண்ணீர் மல்க வந்தடைந்த காட்சிகள் அங்கிருந்தவர்களை உருக்கமடையச் செய்தன.
பூர்ணிமா பாக்யராஜின் உருக்கமான தருணம்
சிகிச்சைக்குப் பிறகு கணவர் நலமுடன் வீடு திரும்புவார் என்ற நம்பிக்கையில் இருந்த பூர்ணிமா பாக்யராஜ், அவரது உடல் வீட்டிற்கு கொண்டுவரப்பட்டதை பார்த்ததும் கட்டுப்படுத்த முடியாமல் கதறி அழுதார். இதையடுத்து அங்கிருந்த உறவினர்களும் நண்பர்களும் அவரை ஆறுதல் கூறி வீட்டிற்குள் அழைத்துச் சென்றனர். குடும்பத்தினர் வெளியிட்ட தகவலின்படி, பாக்யராஜின் இறுதிச் சடங்குகள் நாளை சென்னை பெசன்ட் நகர் மின்மயானத்தில் நடைபெற உள்ளன.
அரசு மரியாதையுடன் இறுதிப் பயணம்
பாக்யராஜின் மறைவுக்கு தமிழக முதல்வர் விஜய் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. அவரது தனித்துவமான கதைகளும் நகைச்சுவையும் மக்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், திரையுலகிற்கு அவர் ஆற்றிய பங்களிப்பை கௌரவிக்கும் வகையில், அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை செலுத்தப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஓராண்டிலே குடும்பத்தில் இரண்டு மீளா துயரம்... இயக்குனர் பாரதிராஜாவின் உடலுக்கு இறுதி மரியாதை செய்த மகள்! கண்கலங்க வைக்கும் காட்சி..!!!