உயிரைப்பறித்த வயிற்று வலி.. 15 வயது சிறுமி விபரீதம்.. கண்ணீரில் பெற்றோர்.! 



15-Year-Old Class 10 Student Dies by Suicide After Suffering From Severe Stomach Pain in Perambalur

வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த மாணவி விபரீத முடிவெடுத்தார். 

15 வயது சிறுமி: 

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆலத்தூர் தாலுகா, பிலிமிசை கிராமத்தில் வசித்து வருபவர் முத்து. இவரின் மகள் மீனாட்சி (வயது 15). சிறுமி அங்குள்ள குன்னம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார். 

இதையும் படிங்க: அறுவடை இயந்திரத்தில் சிக்கி பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.. பரிதாப மரணம்.! 

வயிற்று வலி: 

சிறுமிக்கு கடந்த சில ஆண்டுகளாகவே தீராத வயிற்று வலி இருந்து வந்துள்ளது. இதற்காக பல மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை எடுத்தும் பலனில்லை. இதனால் சிறுமி வயிற்று வலியுடன் அவதிப்பட்டு மனஉளைச்சலில் இருந்து வந்துள்ளார். 

Perambalur

தற்கொலை: 

சம்பவத்தன்றும் வயிற்று வலியால் அவதிப்பட்ட சிறுமி, மனமுடைந்து வீட்டில் ஆட்கள் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த விஷயம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமியின் மரணம் பெற்றோர் & உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 
 

இதையும் படிங்க: ஆபாச வார்த்தைகளுடன் 15 வயது சிறுமிக்கு காதல் தொல்லை.. 48 வயது ஆட்டோ ஓட்டுநர் அதிர்ச்சி செயல்.!