ஆபாச வார்த்தைகளுடன் 15 வயது சிறுமிக்கு காதல் தொல்லை.. 48 வயது ஆட்டோ ஓட்டுநர் அதிர்ச்சி செயல்.! 



in Dharmapuri 15 Year Old Girl Harassed by Auto Driver

சிறுமிக்கு காதல் தொல்லையுடன் பாலியல் ரீதியாகவும் தொல்லை கொடுத்ததாக 48 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

பள்ளி மாணவி: 

தர்மபுரி மாவட்டத்தில் பெற்றோருடன் வசித்து வரும் 15 வயதுடைய சிறுமி, தினமும் பள்ளிக்கு ஆட்டோவில் பயணம் செய்து வந்துள்ளார். இவர் நபிஷா (வயது 48) என்ற ஆட்டோ ஓட்டுனரின் உதவியுடன் பிற மாணவிகளைப்போல பள்ளிக்குச் சென்று வந்துள்ளார். 

இதையும் படிங்க: போதை ஊசி செலுத்திய இளைஞருக்கு நேர்ந்த சோகம்.. கேடுகெட்ட பழக்கம் உயிர்பறித்த துயரம்.!  

ஆபாச கடிதம்: 

இதனிடையே, பள்ளி மாணவியை ஆபாசமாக கவனித்த ஆட்டோ ஓட்டுநர் நபிஷா, சிறுமிக்கு காதல் கடிதம் வழங்கி இருக்கிறார். மேலும், பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சம்பவத்தன்று ஆபாசமான வர்ணனையுடன் காதல் கடிதத்தை கொடுத்து இருக்கிறார். 

love letter

புகார்: 

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி இதுகுறித்து பெற்றோரிடம் தெரிவிக்கவே, மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், நபிஷாவை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

இதையும் படிங்க: திரைப்பட பாணியில் கொடூரம்.. சுத்தியால் அடித்துக்கொன்று ரீல்ஸ் வீடியோ.. கோவையில் அதிர்ச்சி.!