ஐயோ... அந்த நேரத்தில் புள்ளைங்க எப்படி துடிச்சுருக்கும்! தண்டவாளத்தை கடக்க முயற்ற பள்ளி மாணவர்கள்..! 4 பேர் பரிதாபமாக உயிரிழப்பு...! பெரும் சோகம்...!!!



andhra-train-accident-four-school-students-killed

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் ரயில் மோதியதில் 4 பள்ளி மாணவர்கள் உயிரிழந்தனர். டெக்கலி மண்டலம் ரவிவலசா பகுதியில் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது. தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது மாணவர்கள் மீது ராஜ்ய ராணி எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதாக கூறப்படுகிறது.

தண்டவாளத்தை கடக்க முயன்ற மாணவர்கள்

நவ்படாவில் இருந்து டெக்கலி நோக்கி ராஜ்ய ராணி எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது ரவிவலசா பகுதியில் தண்டவாளத்தைக் கடக்க 5 பள்ளி மாணவர்கள் முயன்றுள்ளனர். எதிர்பாராத நேரத்தில் ரயில் வந்ததால், அவர்களால் விலகிச் செல்ல முடியவில்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: திருமணமாகி வெறும் 5 மாதம் தான் ஆகுது...! கிரிகெட் விளையாடிய போது திடீரென சுருண்டு விழுந்த வாலிபர் மரணம்...! ஷாக் வீடியோ...!!!

நான்கு மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

ரயில் மோதியதில் பிளஸ்-2 படித்து வந்த விசாகராவ், சரத், திலீப் மற்றும் சிவா ஆகிய 4 மாணவர்கள் ரயில் விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்றொரு மாணவரான ராஜா படுகாயமடைந்தார்.

காயமடைந்த மாணவருக்கு தீவிர சிகிச்சை

விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். காயமடைந்த ராஜாவை மீட்டு டெக்கலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்த மாணவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். மாணவர்கள் தண்டவாளத்தைக் கடக்க முயன்றது ஏன், விபத்து நடந்த நேரத்தில் அங்கு நிலவிய சூழல் என்ன என்பது உள்ளிட்ட கோணங்களில் ரயில்வே போலீஸ் விசாரணை நடைபெற்று வருகிறது.

 

இதையும் படிங்க: தயவு செய்து யாராவது எங்க அம்மா, அப்பாவ காப்பாத்துங்க! நாங்க அனாதையாக நிற்கிறோம்... ஆதரவில்லாமல் தவிக்கும் பிள்ளைகள்! உதவி வழங்க கோரிக்கை... கண்கலங்க வைக்கும் காட்சி!!!