தயவு செய்து யாராவது எங்க அம்மா, அப்பாவ காப்பாத்துங்க! நாங்க அனாதையாக நிற்கிறோம்... ஆதரவில்லாமல் தவிக்கும் பிள்ளைகள்! உதவி வழங்க கோரிக்கை... கண்கலங்க வைக்கும் காட்சி!!!
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் ரேணிகுண்டா மண்டலம் கரக்கம்பாடி ஸ்ரீனிவாசபுரத்தைச் சேர்ந்த சிறுவர்கள் பி. யஷ்வந்த் மற்றும் பி. அசிதா. கடந்த செப்டம்பர் 17-ம் தேதி ஏற்பட்ட கொடூர சாலை விபத்தில் இவர்களின் பெற்றோர் பலத்த காயமடைந்தனர். தற்போது இருவரும் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பெற்றோர் மருத்துவமனையில்; ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகள்
விபத்தில் சிக்கிய பெற்றோரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால், குடும்பத்தின் அன்றாட வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. வீட்டில் வேறு ஆதரவு இல்லாத நிலையில், சிறுவர்கள் இருவரும் உணவு உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கே சிரமப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பழகின உறவினரே செய்த துரோகம்! விளையாட சென்ற 8 வயது சிறுமியை... கார் பார்க்கிங்கிற்கு அழைத்து சென்று அத்து மீறல்..! பகீர் சம்பவம்...!!!
உதவி வழங்க கோரிக்கை
பெற்றோரின் நிலையை அறிந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள், குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு உடனடி உதவி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் நிதியுதவி அளித்து, குழந்தைகளின் அன்றாட தேவைகளுக்கும் பெற்றோரின் மருத்துவச் செலவுகளுக்கும் உதவ முன்வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
நாரா லோகேஷிடம் பொதுமக்கள் வேண்டுகோள்
பெற்றோர் மருத்துவமனையில் உயிருக்குப் போராடும் நிலையில், இரு குழந்தைகளும் ஆதரவின்றி தவித்து வருவது அப்பகுதி மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. எனவே, அமைச்சர் நாரா லோகேஷ் தலையிட்டு தேவையான உதவிகளை விரைந்து ஏற்பாடு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
రేణిగుంట మండలం కరకంబాడి శ్రీనివాసపురానికి చెందిన P. యశ్వంత్, P. అచిత అనే చిన్నారుల తల్లిదండ్రులు.. ఈ నెల 17న జరిగిన రోడ్డు ప్రమాదంలో తీవ్రంగా గాయపడి ఆసుపత్రిలో చికిత్స పొందుతున్నారు. సాయం అందించేవారు లేక చిన్నారులు తీవ్ర ఆందోళనలో ఉన్నారు, తక్షణమే సహాయం చేయండి అన్న @naralokesh pic.twitter.com/bHJQ6hP0qf
— DR (@RaniBobba) September 23, 2026