பழகின உறவினரே செய்த துரோகம்! விளையாட சென்ற 8 வயது சிறுமியை... கார் பார்க்கிங்கிற்கு அழைத்து சென்று அத்து மீறல்..! பகீர் சம்பவம்...!!!
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மேற்கு பகுதியில் 8 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக 45 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். உறவினர் என்பதால் சிறுமி அவரை நம்பி பழகி வந்த நிலையில், வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் சிவகாசி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
விளையாடச் சென்ற சிறுமியிடம் அத்துமீறல்
கங்காகுளம் வடக்குத் தெருவைச் சேர்ந்த பால்பாண்டி (45), சிமெண்ட் கடை நடத்துவதுடன் நில புரோக்கர் தொழிலும் செய்து வருகிறார். இவருக்கு மனைவியும், மனவளர்ச்சி குறைபாடு கொண்ட 3 வயது பெண் குழந்தையும் உள்ளனர். இவரது உறவினர் குடும்பத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி, 3-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
வழக்கம்போல் பால்பாண்டியின் வீட்டிற்கு விளையாடச் சென்ற சிறுமியை, வீட்டின் கார் நிறுத்தும் பகுதிக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அங்கு சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் செய்ததாக புகார் எழுந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி, அங்கிருந்து அழுதபடியே தனது வீட்டிற்கு ஓடி வந்து தாயிடம் நடந்ததை தெரிவித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
போக்சோ சட்டத்தில் கைது
இதையடுத்து சிறுமியின் தாய் சிவகாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி பால்பாண்டியை கைது செய்தனர். மேலும், சிறுமியிடம் நடைபெற்றதாக கூறப்படும் பாலியல் குற்றத்திற்காக POCSO சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட பால்பாண்டி ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்ற உத்தரவின்படி அவர் விருதுநகர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து போலீசார் வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.