மருத்துவமனையில் 19 மாத குழந்தைக்கு சில நிமிடங்களில் நடந்த கொடுமை! கதறும் பெற்றோர்... . எய்ம்ஸ் சொன்ன அதிர்ச்சி உண்மை.!!!



mp-toddler-loses-eyesight-after-alleged-medical-neglige

மத்தியப் பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தில் 19 மாத குழந்தை, அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்டதாகக் கூறப்படும் தவறான சிகிச்சைக்குப் பிறகு இரு கண்களின் பார்வையையும் இழந்ததாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த விவகாரம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மூக்கு சொட்டு மருந்துக்கு பதிலாக கண்களில் மருந்து?

சாகர் மாவட்டம் பாண்டா பகுதியைச் சேர்ந்த இந்திரஜ் விஸ்வகர்மாவின் 19 மாத மகன் வினய்க்கு கடந்த மே 29-ஆம் தேதி சளி, இருமல் மற்றும் கண்கள் லேசாக சிவந்திருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து குழந்தையை அரசு சிவில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர், சளிக்காக வழங்க வேண்டிய மூக்கு சொட்டு மருந்தை தவறுதலாக குழந்தையின் இரு கண்களிலும் ஊற்றியதாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், பாராசிட்டமால் சிரப் மற்றும் ஒரு ஊசியும் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தீராத வயிறு வலியால் அவதிப்பட்ட வாலிபர்! ஸ்கேனில் கர்ப்பம்னு சொன்ன மருத்துவர்கள்.... இது எப்படி சாத்தியம்? கேலி கிண்டளுக்கு ஆளான வாலிபர்! இறுதியில் காத்திருந்த பேரதிர்ச்சி!!!

சில மணி நேரங்களில் மோசமான பாதிப்பு

மருந்து செலுத்தப்பட்ட சில மணி நேரங்களிலேயே குழந்தையின் இரு கண்களும் கடுமையாக வீங்கி, வலியால் தொடர்ந்து அழுததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அரசு மருத்துவமனையில் நீண்ட நேரம் சிகிச்சைக்காக காத்திருந்தும் முன்னேற்றம் இல்லாததால், முதலில் சாகர் அரசு மருத்துவமனைக்கும், அதன்பின் மேல் சிகிச்சைக்காக போபாலில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கும் குழந்தை மாற்றப்பட்டது.

பெற்றோர் போலீசில் புகார்

அங்கு பரிசோதனை செய்த கண் மருத்துவ நிபுணர்கள், குழந்தையின் இரு கண்களின் பார்வையும் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பார்வையை மீட்டெடுப்பது மிகவும் சிரமமானது என்றும் தெரிவித்ததாக குடும்பத்தினர் கூறியுள்ளனர். மருத்துவ அலட்சியமே இதற்குக் காரணம் என குற்றம்சாட்டிய குழந்தையின் தந்தை, சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகள் குறித்து அதிகாரப்பூர்வ விசாரணை முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை.

 

இதையும் படிங்க: குழந்தை பிறந்த பிறகும் ஒரே வயிற்று வலி! அரசு மருத்துவமனையில் மருத்துவர்களின் அலட்சியத்தால் நேர்ந்த பயங்கரம்! ஸ்கேனில் தெரிந்த அதிர்ச்சி!!!