குழந்தை பிறந்த பிறகும் ஒரே வயிற்று வலி! அரசு மருத்துவமனையில் மருத்துவர்களின் அலட்சியத்தால் நேர்ந்த பயங்கரம்! ஸ்கேனில் தெரிந்த அதிர்ச்சி!!!
மத்தியப் பிரதேசத்தின் கர்கோன் மாவட்ட அரசு மருத்துவமனையில் நடந்த சிசேரியன் அறுவை சிகிச்சைக்குப் பிறகு, பெண்ணின் வயிற்றுக்குள் துணி விடப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வலி அதிகரித்ததால் மீண்டும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதில் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. சம்பந்தப்பட்ட மருத்துவர், செவிலியர் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பிரசவத்திற்குப் பின் தொடர்ந்த வலி
கர்கோன் மாவட்டம் செல்டா கிராமத்தைச் சேர்ந்த மனிஷா, மார்ச் 16 அன்று பிரசவ வலியால் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மறுநாள் மருத்துவர் மோஹித் குப்தா தலைமையில் சிசேரியன் செய்யப்பட்டதில் பெண் குழந்தை பிறந்தது. சில நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு மார்ச் 21 அன்று வீடு திரும்பினார்.
ஆனால் வீட்டிற்கு வந்ததும் வயிற்று வலி குறையாமல் அதிகரித்தது. இதனால் குடும்பத்தினர் அவரை இந்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இதையும் படிங்க: வயிறு வலிப்பதாக சொன்ன 16 வயது சிறுமி! ஹாஸ்பிடலுக்கு போனதும் காத்திருந்து பேரதிர்ச்சி! வாலிபரை வலைவீசி தேடும் போலீஸ்...
ஸ்கேன் பரிசோதனையில் அதிர்ச்சி
அங்கு மேற்கொண்ட ஸ்கேன் பரிசோதனையில், வயிற்றுக்குள் வெளிப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மார்ச் 31 அன்று மீண்டும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது, சர்ஜிக்கல் நேப்கின் துணி உள்ளே விடப்பட்டிருப்பது தெரியவந்தது.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு வேறு எந்த மருத்துவ சிகிச்சையும் பெறாத நிலையில், இது நேரடியாக அரசு மருத்துவமனையின் மருத்துவ அலட்சியம் என உறுதி செய்யப்பட்டது.
இந்த விவகாரம் குறித்து மாவட்ட ஆட்சியர் பவ்யா மிட்டல் உத்தரவின் பேரில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. விசாரணையில், மருத்துவர் மோஹித் குப்தா மற்றும் செவிலியர் திவ்யா வர்மா ஆகியோர் நடைமுறைகளை பின்பற்றாதது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து இருவரையும் பணியிடை நீக்கம் செய்ய சுகாதாரத்துறை ஆணையர் உத்தரவிட்டார். அறுவை சிகிச்சைக்கு முன்பும் பின்னும் உபகரணங்கள் சரிபார்க்க வேண்டும் என்ற அடிப்படை விதி பின்பற்றப்படாதது குறித்து பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.