11 வருஷமாச்சு.. கொண்டாட்டத்தில் மிர்ச்சி செந்தில்.! அவரது அழகிய மகனை பார்த்தீங்களா!!



mirchi-senthil-celebrating-his-wedding-day

ரேடியோ மிர்ச்சியில் ஆர்ஜேவாக பணிபுரிந்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் செந்தில். தொடர்ந்து அவர் சின்னத்திரையில் களமிறங்கி சரவணன் மீனாட்சி என்ற தொடரில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதை பெருமளவில் கவர்ந்தார். அந்த தொடரில் அவருக்கு ஜோடியாக ஸ்ரீஜா நடித்திருந்தார்.

தொடரில் இருவருக்கும் இடையே இருந்த கெமிஸ்ட்ரி சீரியலை சூப்பர் ஹிட் ஆக்கியது. தொடர்ந்து இருவரும் நிஜ வாழ்க்கையிலும் காதலில் விழுந்து திருமணம் செய்து கொண்டனர். மிர்ச்சி செந்தில் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அண்ணா என்ற தொடரில் நடித்து வருகிறார்.

செந்தில் மற்றும் ஸ்ரீஜா ஜோடிக்கு அழகிய மகன் உள்ளார். அவர்கள் அண்மையில் தங்களது 11வது திருமண நாளை மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளனர். இந்நிலையில் செந்தில் தனது மனைவி மற்றும் மகனுடன் எடுத்த புகைப்படங்களுடன் அழகிய வீடியோவை வெளியிட்டுள்ளார். அது சமூக வலைதளத்தில் வைரலான நிலையில் ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.


இதையும் படிங்க: ஜமீன் பரம்பரை! சினிமாவால் இன்றோ பரிதாப நிலை! யார் அந்த நடிகர் தெரியுமா?

இதையும் படிங்க: பழனிமுருகன் கோவிலில் மகன்களுடன் அஷ்டாங்க நமஸ்காரம் செய்த நயன்தாரா- விக்கி! வைரலாகும் புகைப்படங்கள்...