8 வருஷமா அதையெல்லாம் தாங்கி கொண்டேன்! ஆனால் இனியும் பொறுக்க முடியாது! 24 மணி நேரத்தில் அதை நீக்காவிட்டால்.... ராஷ்மிகா மந்தனாவின் கடும் எச்சரிக்கை..!!!



rashmika-mandanna-warning-against-social-media-rumours

திரையுலக பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகள் அடிக்கடி சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில், சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட நடிகை ராஷ்மிகா மந்தனா தனது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பரவி வரும் தவறான தகவல்களுக்கு எதிராக கடும் எச்சரிக்கை விடுத்திருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.

ஜெய்பூரில் பிரமாண்ட திருமணம்

பிரபல தென்னிந்திய நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் நடிகர் விஜய் தேவரகொண்டா ஆகியோரின் திருமணம் கடந்த மாதம் 26ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. திரையுலகில் பெரும் கவனம் பெற்ற இந்த நிகழ்வு ரசிகர்களிடமும் சமூக வலைதளங்களிலும் பரவலாக பேசப்பட்டது.

திருமணத்திற்குப் பிறகு பரவும் வதந்திகள்

திருமணத்துக்குப் பிறகு தனது வாழ்க்கையின் புதிய கட்டத்தைத் தொடங்கியுள்ள ராஷ்மிகா, சில நாட்களிலேயே சமூக வலைதளங்களில் தனது தனிப்பட்ட வாழ்க்கையை குறித்து பல தவறான தகவல்கள் மற்றும் அவதூறுகள் பரவி வருவதாக வேதனை தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கிசுகிசு வீடியோ! ஒரே காருல, ஒரே கலருல பட்டு வேட்டி சட்டை, இங்குட்டு புடவையுடன் த்ரிஷா! சர்ச்சைக்கு நடுவே இப்படி ஒரு வருகை.... அதிர வைக்கும் அப்படி ஒரு காட்சி!

எக்ஸ் தளத்தில் கடும் எச்சரிக்கை

இதுகுறித்து தனது எக்ஸ் (X) சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்டுள்ள ராஷ்மிகா, கடந்த எட்டு ஆண்டுகளாகவே இத்தகைய தனிப்பட்ட தாக்குதல்களை எதிர்கொண்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார். இதுவரை அந்த விமர்சனங்கள் தன்னை மட்டுமே பாதித்ததால் அமைதியாக இருந்தேன்; ஆனால் இப்போது நிலைமை எல்லை மீறிவிட்டதால் இனி மௌனமாக இருக்க முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஒருவரின் தனியுரிமையை மதிக்காமல் தவறான தகவல்களை பரப்புவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதை நடிகை ராஷ்மிகா மந்தனா தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து பரவும் வதந்திகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்திருப்பது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

இதையும் படிங்க: கொண்டாட்டத்தின் நடுவில் மைதானத்தில் இஷான் கிஷன் காதலிக்கு முத்தமிட்டாரா...?வைரலாகும் அந்த ஒரு சர்ச்சை போட்டோ.... பின்னணி உண்மையின் வீடியோ இதோ...!!!