காவாலா பாட்டு எல்லாம் ஓரம் போ!! வந்துட்டா மோனிகா.. வைரலாகும் லேட்டஸ்ட் பாடல்.
ஜமீன் பரம்பரை! சினிமாவால் இன்றோ பரிதாப நிலை! யார் அந்த நடிகர் தெரியுமா?

தமிழ் சினிமாவில் தனது தனித்துவமான குணச்சித்திர வேடங்களால் ரசிகர்களிடம் தனி இடம் பிடித்தவர் நடிகர் சத்யன். சிறு கதாபாத்திரங்களிலும், நம்மை ஆச்சரியப்படுத்தும் காமெடி டைமிங்கிலும் அவர் ஒரு தனித்துவமான நடிகர்.
நடிகர் சத்யன்விஜய் நடித்த நண்பன் படத்தில் சைலன்சர் என்ற கேரக்டரில் சாதாரண தோற்றத்துடன் நடித்த சத்யன், “ஹே தோத்தாங்குளீஸ் ஹாவிங் ஃபன்னா” எனும் வசனத்தின் மூலம் அனைவரின் மனதிலும் இடம் பிடித்தார். அவரது முகபாவனைகள், சிறப்பான காமெடி நடிப்பு ரசிகர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றது.
சத்யன் தனது திரையுலக பயணத்தை சூர்யா நடித்த காதலே நிம்மதி படம் மூலம் ஆரம்பித்தார். பின்னர், 2000ஆம் ஆண்டு இளையராஜா இசையில் வெளியான இளையவன் படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இதைத் தொடர்ந்து, கண்ணா உன்னை தேடுகிறேன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இதையும் படிங்க: பழனிமுருகன் கோவிலில் மகன்களுடன் அஷ்டாங்க நமஸ்காரம் செய்த நயன்தாரா- விக்கி! வைரலாகும் புகைப்படங்கள்...
ஜமீன்தார் குடும்பத்தை சேர்ந்தவர் சத்யன்
சாதாரண நடிகராக தெரிந்தாலும், சத்யன் ஒரு ஜமீன் குடும்பத்தை சேர்ந்தவர். கோயம்புத்தூர் அருகேயுள்ள மாதம்பட்டி ஊரிலிருந்து வந்தவர். அவரது தந்தை மாதம்பட்டி சிவக்குமார் பல கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துக்களின் அதிபதி. 5 ஏக்கர் பங்களா, நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் இவர்களுடையது.
சினிமாவில் தோல்விகள் மற்றும் சொத்து இழப்புகள்
சினிமாவில் ஆர்வம் காரணமாக சத்யனின் தந்தை சில படங்களை தயாரித்தார். ஆனால், அனைத்தும் தோல்வியடைந்ததால், சொத்துக்களை விற்கும் நிலை வந்தது. மகனை ஹீரோவாக்கும் ஆசையுடன் தயாரித்த இளையவன் படமும் தோல்வியடைந்ததால், மீதமிருந்த சொத்துகளும் விற்கப்பட்டன.
இன்றைய நிலைமை மற்றும் கௌரவம்
ஒருகாலத்தில் “குட்டி ராஜா” என அழைக்கப்பட்ட சத்யன், இப்போது சொந்த ஊருக்கே செல்வதை தவிர்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். ஆனால் சினிமாவில் தனது காமெடித் திறமையால், தனி இடத்தை ஏற்படுத்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தந்தையான பிக்பாஸ் புகழ் ஷாரிக் ஹாசன்! மகனுடன் எடுத்த முதல் புகைப்படத்தில் வைரலாகும் வீடியோ! குவியும் வாழ்த்துக்கள்..