அந்தஸ்துக்காக சிங்கத்தை செல்லப்பிராணியாக வீட்டில் வளர்க்கும் பணக்காரர்கள்! பஞ்சாபில் மட்டும் 584 சிங்கம், புலி, சிறுத்தைகள்..‌.. வைரலாகும் வீடியோக்கள்!



pakistan-il-illegal-lion-tiger-pet-issue

பாகிஸ்தானில் சட்டங்களை மீறி, மக்கள் வீட்டிலும் பண்ணையிலும் சிங்கங்கள், புலிகள் போன்ற காட்டு உயிரினங்களை வளர்கின்றனர். இந்த தகவல் தற்போது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

பஞ்சாப் மாகாணம், லாஹோர் நகரில் அண்மையில் ஒரு வீட்டில் வளர்க்கப்பட்ட சிங்கம் தப்பி ஓடி, தெருவில் நடமாடி இரு குழந்தைகள் உட்பட மூன்று பேரை தாக்கியது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது. இந்த சம்பவம் நாட்டில் காட்டு உயிர் வளர்ப்பு தொடர்பான சட்டங்களை மீறுகிறார்கள் என்பதற்கு பெரும் சாட்சி அமைந்துள்ளது.

சட்டத்தை மீறும் வளர்ப்பு முறைகள்

விலங்குகளை வளர்ப்பதற்கான சட்டப்படி, ஒவ்வொரு விலங்குக்கும் ரூ.50,000 கட்டணம் செலுத்தி பதிவு செய்ய வேண்டும். ஆனால் பலர் இதை மீறி, சட்டவிரோதமாக சிங்கம், புலி, சிறுத்தை போன்ற விலங்குகளை பதிவு செய்யாமல் வளர்த்து வருகின்றனர்.

இதையும் படிங்க: Video : வீட்டின் முன்பு நின்று பிச்சை கேட்ட நபர்! திடீரென ஓரமாக சென்ற பூனையை அடித்து கொன்று! இறுதியில் அவர் செய்த கொடூர செயலை பாருங்க! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..

சோதனையில் சிங்கங்கள் மற்றும் சிறுத்தைகள் பறிமுதல்

இதையடுத்து பஞ்சாப் மாகாணத்தில் உள்ள 38 இனப்பெருக்க மையங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் 18 சிங்கங்கள் மற்றும் சிறுத்தைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இந்தச் செயல்களில் ஈடுபட்ட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானியர்கள் தங்களது அந்தஸ்தை காட்டும் நோக்கில், காட்டு உயிர்களை வீட்டிலும் பண்ணையிலும் வளர்ப்பது ஒரு பழக்கமாக மாறி வருகிறது. பஞ்சாப் மாகாணத்தில் மட்டும் தற்போது 584 சிங்கங்கள் மற்றும் புலிகள் வீட்டில் வளர்க்கப்படுகின்றன என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

இந்தப் பாதுகாப்பற்ற சூழ்நிலைக்கு முடிவுகட்ட, அரசு உடனடியாக  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனவிலங்கு பாதுகாப்பு ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

இதையும் படிங்க: Video : கம்ப்யூட்டரில் ஒரு கை, பெண் மீது இன்னொரு கை! பணி நேரத்தில் பெண்ணிடம் அத்துமீறிய வங்கி ஊழியர்! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ...