Video : கம்ப்யூட்டரில் ஒரு கை, பெண் மீது இன்னொரு கை! பணி நேரத்தில் பெண்ணிடம் அத்துமீறிய வங்கி ஊழியர்! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ...



sbi-manager-sexual-harassment-himachal-pradesh-una

ஹிமாசல பிரதேசம் மாநிலத்தின் உனா மாவட்டத்தில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா கிளையில் பணியாற்றும் மேலாளர் ஒருவர் மீது பாலியல் புகார் பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பணியாளர் மாணீந்திரா கன்வார் என்ற சர்வீஸ் மேனேஜர், அவருடன் பணியாற்றும் இரண்டு பெண் ஊழியர்களிடம் ஒழுங்கீனமாக நடந்துக்கொண்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகாரின் விவரத்தில், அவர் தொடர்ந்து தொந்தரவு செய்ததுடன், பாலியல் உறவுக்காக வற்புறுத்தி,  அதற்கான பரிசாக iPhone வழங்கும் வாக்குறுதியும் அளித்ததாக கூறப்பட்டுள்ளது.

பெண் ஊழியரின் வீடியோ ஆதாரம் 

இந்த பிரச்சனையை மையமாக கொண்டு, பாதிக்கப்பட்ட பெண் ஊழியர் ஒருவர் ஜூலை 2ஆம் தேதி மற்றொரு பெண் ஊழியரிடம் அவர் தவறாக நடக்கும் காட்சியை வீடியோவாக பதிவு செய்துள்ளார். இதைத் தொடர்ந்து எழுத்துப்பூர்வ புகாரும் வழங்கப்பட்டிருக்கின்றது.

இதையும் படிங்க: Video : பண்ணைக்கு சென்ற விவசாயி காணவில்லை! தேடிய குடும்பத்தினர்! 8 அடி பைதான் பாம்பின் வயிற்றை கிழித்து விவசாயி உடலை வெளியே எடுத்த மக்கள்! திக் திக் வீடியோ காட்சி...

இந்த வீடியோ மற்றும் புகாரின் அடிப்படையில் மாணீந்திரா கன்வாருக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இது உனா மாவட்ட எஸ்பிஐ கிளைகளில் கடந்த நான்கு ஆண்டுகளில் இரண்டாவது பாலியல் புகாராக இருப்பதும் கவலைக்குரிய விடயமாகும்.

பொதுமக்கள் கண்டனம்

பெண் ஊழியர்கள் இடத்தில் தொடரும் இத்தகைய ஒழுங்கீன சம்பவங்கள் குறித்து பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். தற்போது இந்த வழக்கு குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: உலகத்தை வியக்கவைத்த ஜப்பான் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு! எல்லா ரத்த வகைக்கும் பொருந்தும் செயற்கை ரத்தம்! மருத்துவ உலகின் சாதனை!