அந்த ஒரே ஒரு மாத்திரை சாப்பிடத்தால் 24 வயது இளைஞருக்கு எகிறிய இதயத் துடிப்பு.... உயிரை எடுக்கப் பார்த்த அந்த ஒரு தவறு! மருத்துவர் கூறிய பகீர் கிளப்பும் உண்மை..!!!
மருத்துவர் ஆலோசனை இல்லாமல் மருந்துகளை எடுத்துக் கொள்வது எவ்வளவு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை வெளிப்படுத்தும் ஒரு சம்பவம் சமீபத்தில் மருத்துவர்களை கூட அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சாதாரணமாக எடுத்த ஒரு Fluconazole மாத்திரை மற்றும் போதைப் பொருள் பயன்பாடு சேர்ந்து, ஒரு இளைஞரின் இதய துடிப்பு ஆபத்தான அளவுக்கு உயர்ந்த சம்பவம் தற்போது எச்சரிக்கை எடுத்துக்காட்டாக பேசப்படுகிறது.
212 ஆக உயர்ந்த இதய துடிப்பு
விடுதியில் நண்பர்களுடன் இருந்த 24 வயது இளைஞருக்கு திடீரென இதயத் துடிப்பு ஒரு நிமிடத்திற்கு 212 முறை என அபாயகரமான அளவுக்கு உயர்ந்தது. மூச்சுத் திணறல் மற்றும் கடும் பதற்றத்துடன் அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆரம்பத்தில் இந்த நிலைக்கு காரணம் என்ன என்பது மருத்துவர்களுக்கே தெளிவாக தெரியாமல் இருந்தது.
நண்பர்களுக்கு ஏதும் இல்லை – ஒருவருக்கு மட்டும் பாதிப்பு
அந்த இளைஞருடன் இருந்த நண்பர்கள் அனைவரும் மது அருந்தி சிகரெட் மற்றும் கஞ்சா புகைத்திருந்ததாக தெரியவந்தது. ஆனால் அவர்களில் மற்ற நான்கு பேருக்கும் எந்த உடல்நலப் பிரச்சினையும் ஏற்படாத நிலையில், இந்த இளைஞருக்கு மட்டும் இதயத் துடிப்பு அதிகரித்தது மருத்துவர்களை ஆச்சரியப்பட வைத்தது. இதனால் அவர்கள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: மக்களே உஷார்...நாய்க்குட்டி நக்கியதால் நடந்த உயிர் போராட்டம்! 6 முறை நின்று துடித்த இதயம்..... கை, கால்களையும் இழந்த பெண்! அதிர்ச்சி சம்பவம் !!!
மருந்து மற்றும் போதைப் பொருள் சேர்க்கை காரணம்
விசாரணையில், அந்த இளைஞர் முந்தைய நாள் தனது உடலில் ஏற்பட்ட சாதாரண பூஞ்சை தொற்றுக்காக மருத்துவர் பரிந்துரை இல்லாமல் Fluconazole 150 mg மாத்திரையை மருந்தகத்தில் வாங்கி எடுத்திருந்தது தெரியவந்தது. இந்த மருந்து உடலில் இருக்கும் நிலையில் கஞ்சா போன்ற போதைப் பொருட்களை பயன்படுத்தினால், கல்லீரல் நச்சுகளை வெளியேற்ற முடியாமல் அவை உடலில் தங்கி இதயத் துடிப்பை பல மடங்கு அதிகரிக்கச் செய்யும் என்று மருத்துவர்கள் விளக்கம் அளித்தனர்.
சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டதால் அந்த இளைஞர் உயிர் தப்பியுள்ளார். இருப்பினும் மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எடுக்கப்படும் மருந்துகள் மற்றும் போதைப் பொருட்களின் சேர்க்கை கடுமையான ஆபத்துகளை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சாதாரணமாக தோன்றும் ஒரு மாத்திரையே சில நேரங்களில் உயிருக்கு ஆபத்தாக மாறக்கூடும் என்பதே இந்த சம்பவம் எடுத்துக்காட்டாக உள்ளது.