Video : பண்ணைக்கு சென்ற விவசாயி காணவில்லை! தேடிய குடும்பத்தினர்! 8 அடி பைதான் பாம்பின் வயிற்றை கிழித்து விவசாயி உடலை வெளியே எடுத்த மக்கள்! திக் திக் வீடியோ காட்சி...

இந்தோனேசியாவின் தென் பூட்டான் மாவட்டம் பௌடுகா பகுதியில் உள்ள மஜபஹித் கிராமத்தை சேர்ந்த 63 வயது விவசாயி லா நோட்டி, கடந்த வெள்ளிக்கிழமை தனது பண்ணைக்கு சென்றார். ஆனால் அவர் வீடு திரும்பாததை அறிந்த குடும்பத்தினர் பெரும் கவலையடைந்தனர்.
காணாமல் போன விவசாயினை தேடினர்
பல மணி நேரம் காத்திருந்த குடும்பத்தினர், அருகிலுள்ள பண்ணை பகுதிகளில் அவரை தேட ஆரம்பித்தனர். பண்ணைக்கு அருகிலேயே அவரது மோட்டார் சைக்கிள் இருப்பதை பார்த்ததும், அவர் அங்கேயே உள்ளதாக உறுதியாக நினைத்தனர்.
தேடலில் ஈடுபட்டவர்கள், பண்ணைக்கு அருகிலுள்ள ஒரு தோட்டத்தில் 8 மீட்டர் நீளமுள்ள பைதான் பாம்பு ஒன்று நடக்க முடியாத அளவுக்கு வயிறு வீங்கி கிடப்பதை கவனித்தனர். பாம்பின் வயிறு மனித உடலை விழுங்கியதாக சந்தேகம் எழுந்தது.
இதையும் படிங்க: மின்னல் தாக்கிய எலியை விழுங்கும் கருப்பு மாம்பா பாம்பு! இயற்கையின் அதிசய காட்சி...
பாம்பின் வயிறில் இருந்து வெளியாகிய சடலம்
உடனடியாக கிராம மக்கள் அந்த பாம்பை கொன்றனர். பின்னர் அதன் வயிற்றைப் பிளந்தபோது, முழுமையாக விழுங்கப்பட்ட மனித உடல் வெளிவந்தது. அச்சடலம் விவசாயி லா நோட்டியின் சடலமாக அடையாளம் காணப்பட்டது.
சமூக ஊடகங்களில் பரவிய வீடியோ
இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. @therealtarzann என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் இந்த சம்பவத்தின் வீடியோவை பகிர்ந்ததும், அது இணையத்தில் வைரலாக பரவியது. பலரும் அதைப் பார்த்து துயரமும் அச்சமும் தெரிவித்துள்ளனர்.
மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுரை
வனப்பகுதிகளுக்கு அருகில் வசிக்கும் மக்கள் எதிர்காலத்தில் பைதான் பாம்புகள் போன்ற ஆபத்தான விலங்குகளால் ஏற்படக்கூடிய உயிர் அபாயங்களை உணர வேண்டும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தனியாக வனப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உலகத்தை வியக்கவைத்த ஜப்பான் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு! எல்லா ரத்த வகைக்கும் பொருந்தும் செயற்கை ரத்தம்! மருத்துவ உலகின் சாதனை!