ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் காந்தாரா 2.! எப்போ ரிலீஸ்?? வெளிவந்த அறிவிப்பு!!

கடந்த 2022 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்ற திரைப்படம் காந்தாரா. இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி, அவரே கதாநாயகனாகவும் நடித்திருந்தார். மேலும் கதாநாயகியாக சப்தமி கவுடா நடித்திருந்தார்.
குறைந்த பட்ஜெட்டில் உருவான காந்தாரா திரைப்படம் நல்ல வரவேற்பை பெரும் ரூ.400 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்து சாதனை படைத்தது. இந்நிலையில் படத்தின் இரண்டாம் பாகமாக ‛காந்தாரா சாப்டர் 1' உருவாகியது. படத்தை ஹொம்பலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் இதில் ஜெயராம் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. இந்த நிலையில் கதாநாயகன் ரிஷப் ஷெட்டியின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி காந்தாரா சாப்டர் 1 அக்டோபர் 2ஆம் தேதி திரைக்கு வரவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: லட்சத்தில் இருந்து தற்போது கோடியில் வாழ்க்கை வாழும் நடிகர் எஸ்.ஜே. சூர்யா! அவரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
இதையும் படிங்க: லிப் டூ லிப் முத்தம் கொடுத்து வாழ்த்து! நீ என் உயிரை விட முக்கியமானவள்! சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகை....