மகன் அம்மா வீட்டில்! கழுத்து, மார்பு, வயிறு உள்ளிட்ட இடங்களில் சுமார் 20 முறை! துடிதுடித்த தாய்! பார்த்து ரசித்த காதல் கணவர்! பகீர் சம்பவம்....



woman-killed-by-husband-karnataka-domestic-violence

கர்நாடக மாநிலம் கோரகிரி பகுதியில் நடந்த கொடூரக் கொலை சம்பவம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காய்கறி கடையில் வேலை செய்யும் நவீன் என்பவரும், சோசியல் மீடியா மூலம் பழகிய கீதா என்பவரும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.

திருமணத்திற்குப் பிறகு இந்த தம்பதிக்கு ஒரு வயதில் மகன் உள்ளார்.  ஆனால் சமீபகாலமாக நவீன் குடிபழக்கத்திற்கு அடிமையாக, அடிக்கடி தகராறுகள் ஏற்படத் துவங்கியது. அவர்களது வீட்டுவாடகையாளர்களே பலமுறை சமாதானம் செய்ய முயன்றனர்.

குழந்தையின் நலனை கருத்தில் கொண்ட கீதா

குடும்பத்தில் நிலவும் அமைதியற்ற சூழ்நிலை குழந்தையை பாதிக்கக்கூடாது என எண்ணிய கீதா, தன் மகனை தாய் வீட்டிற்கு அனுப்பி வைத்தார். ஆனால் நவீனின் செயல்கள் மாறவே இல்லை

இதையும் படிங்க: வெடித்து சிதறிய எரிமலையின் நடுவே காதலிக்கு ப்ரொபோஸ் செய்த காதலன்! ஒரே ரொமான்ஸ் தான்! தீயாய் வைரல்..!!!

சிறிய தகராறு கொலையாக முடிந்தது

இன்று முன்தினம், மீண்டும் குடிபோதையில் வீட்டிற்கு வந்த நவீன், கீதாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கோபத்தில் கதவை மூடிய நவீன், கத்தியை எடுத்து கீதாவின் கழுத்து, முகம், வயிறு, மார்பு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 20 முறை குத்தி கொலை செய்தார்.

சம்பவ தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து, கீதாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். தப்பி ஓடிய நவீனை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம், கோரகிரி பகுதியில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

 

இதையும் படிங்க: Video : பட்டப்பகலில் திடீரென கடைக்குள் நுழைந்து மலம் கழித்த பெண்! அதிர்ச்சியில் உறைந்த ரிசப்ஷனிஸ்ட்! வெளியான சிசிடிவி காட்சிகள்....