கடன் சுமையை குறைத்து வருவாயை அதிகரிக்க தவெக அரசின் மாஸ்டர் பிளான்! இனி அரசுக்கும், அறநிலையத்துறைக்கும் கூடுதல் வருவாய்.... மாஸ் காட்டும் முதல்வர் விஜய்..!!!



tn-temple-lands-solar-power-revenue

தமிழக அரசின் நிதி நிலையை வலுப்படுத்த புதிய வருவாய் வழிகளை கண்டறியும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இதன் ஒரு பகுதியாக, இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள காலி கோயில் நிலங்களை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக, 10 ஏக்கருக்கும் அதிகமான பயன்பாடற்ற நிலங்களில் சோலார் மின் நிலையங்களை அமைப்பது குறித்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

கோயில் நிலங்களில் சோலார் மின் நிலையம்?

மாநிலத்தின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்காக பெறப்பட்ட கடன்களின் அளவு அதிகரித்துள்ள நிலையில், அரசின் சொந்த வருவாயை உயர்த்துவது முக்கிய நோக்கமாக மாறியுள்ளது. இதற்காக பொருளாதார நிபுணர் மாண்டேக்சிங் அலுவாலியா தலைமையிலான குழுவின் ஆலோசனைகளின் அடிப்படையில், பல்வேறு துறைகளிலும் வருவாய் பெருக்கும் நடவடிக்கைகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன.

இதையும் படிங்க: BREAKING: சற்று முன்... சொன்னதை செய்யும் தவெக அரசு! ரூ.2,500 மகளிர் உரிமைத்தொகை உயர்வு... வெளியான முக்கிய அறிவிப்பு..!!!

அந்த வகையில், விவசாயம் உள்ளிட்ட எந்தப் பயன்பாட்டிலும் இல்லாமல் காலியாக கிடக்கும் கோயில் நிலங்கள் குறித்து அதிகாரிகள் கணக்கெடுத்து வருகின்றனர். குறிப்பாக 10 ஏக்கருக்கு மேல் பரப்பளவு கொண்ட நிலங்களை கண்டறிந்து, அவற்றில் சோலார் மின் நிலையங்கள் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அரசுக்கும் அறநிலையத்துறைக்கும் கூடுதல் வருவாய்

திட்டம் செயல்படுத்தப்பட்டால், பயன்படுத்தப்படாமல் இருக்கும் நிலங்கள் மூலம் மின் உற்பத்தியை அதிகரிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தொழிற்சாலைகள் மற்றும் வீடுகளுக்கான மின்சார தேவையை சமாளிக்க உதவுவதுடன், கோயில் நிர்வாகங்களுக்கும் கூடுதல் வருவாய் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. கோயில் நிலங்கள் மூலம் கிடைக்கும் வருவாயை அறநிலையத்துறையின் நிதி நிலையை மேம்படுத்தவும் பயன்படுத்த முடியும் என அதிகாரிகள் கருதுகின்றனர்.

வெளிப்படைத்தன்மைக்கு முக்கியத்துவம்

கோயில் நிலங்களை வேறு பயன்பாட்டுக்கு கொண்டு வரும்போது முழுமையான வெளிப்படைத்தன்மையை கடைப்பிடிக்க வேண்டும் என துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. நிலங்களின் பயன்பாடு, வருவாய் ஈட்டும் வழிகள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் முறையாக ஆய்வு செய்யப்பட உள்ளன. சோலார் மின் உற்பத்தி மட்டுமின்றி, காலியாக உள்ள நிலங்களை வேறு எந்தெந்த வகைகளில் பயனுள்ளதாக பயன்படுத்தலாம் என்பது குறித்தும் தொடர்ந்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதேபோல், அறநிலையத்துறை தவிர அரசின் பிற முக்கிய துறைகள் மூலமாகவும் புதிய வருவாய் ஆதாரங்களை உருவாக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

 

இதையும் படிங்க: பேரவையில் CM கேட்ட அந்த கேள்வி... அப்பாவை காணோம்? மேடையிலேயே ஸ்டாலின் போட்டுடைத்த உண்மை! இது யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்...!!!