BREAKING: சற்று முன்... சொன்னதை செய்யும் தவெக அரசு! ரூ.2,500 மகளிர் உரிமைத்தொகை உயர்வு... வெளியான முக்கிய அறிவிப்பு..!!!



women-rights-scheme-2500-announcement

தமிழக சட்டப்பேரவையில் மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,500 ஆக உயர்த்துவது தொடர்பான விவாதம் கவனம் பெற்றுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வெளியாகும் என முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கேள்வி எழுப்பினார். இதற்கு அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் அளித்த பதில், புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரூ.2,500 ஆக உயருமா? சட்டப்பேரவையில் கேள்வி

சட்டப்பேரவை நிகழ்வின்போது, மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,500 ஆக உயர்த்துவது குறித்து கேள்வி முன்வைக்கப்பட்டது. குறிப்பாக, இந்தத் தொகையை உயர்த்துவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வெளியாகும் என கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கேட்டார்.

இதையும் படிங்க: BREAKING : சற்று முன்.. மகளிர் உரிமைத்தொகை மாதம் ரூ.2500...! தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு..!!!

தவெக வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்

இதற்கு பதிலளித்த அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், தவெக சார்பில் அளிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிச்சயமாக நிறைவேற்றப்படும் என்று திட்டவட்டமாக தெரிவித்தார். அமைச்சரின் இந்த பதில், மகளிர் உரிமைத் தொகை உயர்வு குறித்த விவாதத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

அதிகரிக்கும் எதிர்பார்ப்பு

அமைச்சரின் உறுதியான பதிலைத் தொடர்ந்து, மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,500 ஆக உயர்த்தும் அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. குறிப்பாக பெண்கள் தரப்பில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்நோக்கும் நிலை உருவாகியுள்ளது. ரூ.2,500 உயர்வு குறித்த இறுதி அறிவிப்பு எப்போது வெளியாகும் என்பதே தற்போது முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.

 

இதையும் படிங்க: பெண்களின் பல நாள் எதிர்பார்ப்பு.... மகளிர் உரிமைத் தொகை உயர்வு உறுதியானது..! அமைச்சர் சொன்ன குட் நியூஸ்.!!!