இறைவனின் கிருபையா..! வீட்டில் வைத்து வழிபட்ட மாதா சிலையின் கன்னத்திலிருந்து வடிந்த எண்ணெய் திரவம்..! சிலுவையை பார்வையிட திரண்ட கிராம மக்கள்..! மெய்சிலிர்க்க வைக்கும் சிறப்பு பிரார்த்தனை வழிபாடு..!!!



mother-mary-statue-liquid-palakkadu-naduvoor

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அருகே வீட்டில் வைக்கப்பட்டிருந்த மாதா சிலையின் கன்னத்தில் இருந்து எண்ணெய் போன்ற திரவம் வடிந்ததாக தகவல் பரவியுள்ளது. இதைக் கண்ட வீட்டின் உரிமையாளர்கள் சிலையை அருகிலுள்ள மகிமை மாதா ஆலயத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து, அந்தச் சிலையைப் பார்வையிடவும் வழிபாடு நடத்தவும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமானோர் ஆலயத்திற்கு வந்தனர்.

நடுவூர் மாதா குப்பம் பகுதியில் ராஜன், சகாயமேரி தம்பதியர் தங்கள் வீட்டில் சுமார் ஒன்றரை அடி உயரமுள்ள மாதா சிலையை வைத்து தினமும் வழிபட்டு வந்துள்ளனர். இந்நிலையில், சிலையின் கன்னப் பகுதியில் இருந்து எண்ணெய் போன்ற திரவம் வடிவதைக் கண்ட அவர்கள், சிலையை மகிமை மாதா ஆலயத்தில் ஒப்படைத்து வைத்தனர்.

இதையும் படிங்க: சற்று முன்... கடன் தள்ளுபடி...! 24,301 கடன் பெறுநர்களுக்கு... தமிழக அரசு வெளியிட்ட புதிய அரசாணை!

சிலையைப் பார்வையிட திரண்ட பொதுமக்கள்

மாதா சிலையில் இருந்து திரவம் வடிவதாக வெளியான தகவல், நடுவூர் மாதா குப்பம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் பரவியது. இதையடுத்து, ஏராளமான பொதுமக்கள் மகிமை மாதா ஆலயத்திற்குச் சென்று சிலையைப் பார்வையிட்டனர்.

பாதிரியார் தலைமையில் சிறப்புப் பிரார்த்தனை

ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ள மாதா சிலையை முன்னிட்டு, பங்குத் தந்தை பாதிரியார் ரொசாரியா தலைமையில் சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்றது. இதில் திரளான மக்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து, பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் ஆலயத்திற்கு வந்து சிலையைப் பார்வையிட்டு வழிபாடு நடத்தி வருகின்றனர். மாதா சிலையின் கன்னத்தில் இருந்து திரவம் வடிந்தத தகவல் அப்பகுதியில் பேசுபொருளாகியுள்ளது. 

 

இதையும் படிங்க: செஞ்சி சிறுமி மாயம் வழக்கில் அடிக்கடி கணவன், மனைவியிடம் வந்த தகராறு! பிறந்தநாள் அன்று அவரிடம் வாங்கின 5,000 தொகை! 43 நாட்கள் கடந்து தாய் சொன்ன அந்த ஒரு வார்த்தை....!!!