தொடர்ந்து என்னை டார்ச்சல் பண்றாங்க... தோழிகளுக்கு ஆடியோ அனுப்பிவிட்டு மாணவி எடுத்த விபரீத முடிவு! கல்லூரியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!!



kanyakumari-nursing-student-suicide-college-principal-c

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியில் உள்ள தனியார் செவிலியர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த கேரளாவைச் சேர்ந்த மாணவி அன்சிஜி உயிரிழந்தார். கல்லூரிக்கு செல்போன் கொண்டு வந்ததாகக் கூறி அவர் சக மாணவிகள் முன்னிலையில் அவமானப்படுத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

செல்போன் விவகாரத்தில் ஏற்பட்ட மனவேதனை

கல்லூரி விதிமுறைகளை மீறி செல்போன் கொண்டு வந்ததாகக் கூறி, முதல்வர் ஷீஜா மற்றும் ஆசிரியர்கள் அன்சிஜியை கடுமையாகக் கண்டித்ததாக தெரிகிறது. மேலும், அவரது செல்போனும் நிர்வாகத்தினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனால் அவர் மனரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: அறியாமல் செய்த தவறு! தொடர்ந்து கேட்ட அசிங்க பேச்சு.... அப்பா, அம்மா சாரி! அவங்க டார்ச்சல் தாங்க முடியல... கடிதத்தில் கதறிய மாணவி. பின்னணியில் இருந்த கொடூர உண்மை.!!!

தொடர்ந்து தன்னை துன்புறுத்துவதாக தோழிகளிடம் கண்ணீருடன் அன்சிஜி ஆடியோ பதிவு ஒன்றையும் அனுப்பியுள்ளார். இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை கல்லூரியின் மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்தார். படுகாயமடைந்த அவரை மீட்டு மார்த்தாண்டம் மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

முதல்வர் மீது வழக்குப்பதிவு

எனினும், மருத்துவர்களின் தொடர் சிகிச்சை பலனளிக்காமல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அன்சிஜி உயிரிழந்தார். இதையடுத்து அவரது பெற்றோர் கருங்கல் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில், மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக கல்லூரி முதல்வர் மற்றும் நிர்வாகத்தினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்லூரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக இருக்கும் முதல்வர் உள்ளிட்டோரை போலீசார் தேடி வருகின்றனர். மாணவியின் மரணம் தொடர்பாக கல்லூரி நிர்வாகத்தினரிடமும், மாணவிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, அப்பகுதியில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க கல்லூரி வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 

இதையும் படிங்க: BREAKING: சற்று முன்... சொன்னதை செய்யும் தவெக அரசு! ரூ.2,500 மகளிர் உரிமைத்தொகை உயர்வு... வெளியான முக்கிய அறிவிப்பு..!!!