கணித பாடத்தில் நல்ல மார்க் போடுறேன்..! 14 வயது மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி வகுப்பறையிலேயே அத்துமீறிய ஆசிரியர்! அடுத்து வீட்டில்... 8 மாதம் கழித்து வெளிவந்த பகீர் உண்மை..!!!



rajkot-teacher-arrested-for-sexual-assault-of-14-year-o

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் 14 வயது பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கணித ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதிக மதிப்பெண்கள் வழங்குவதாக ஆசை வார்த்தை கூறி மாணவியை ஆசிரியர் துன்புறுத்தியதாக புகார் எழுந்துள்ளது. சுமார் 8 மாதங்களுக்கு பிறகு சிறுமி தனது தாயிடம் நடந்ததை தெரிவித்ததை அடுத்து, விவகாரம் போலீஸ் கவனத்துக்கு சென்றுள்ளது.

அதிக மதிப்பெண் தருவதாக ஆசை வார்த்தை

ராஜ்கோட்டில் உள்ள மதர் தெரசா பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வந்த மோகித் டாங்க் என்பவர், மாணவியிடம் நெருக்கமாக இருந்தால் கணிதத்தில் நல்ல மதிப்பெண்கள் வழங்குவதாக கூறியதாக தெரிகிறது. ஆரம்பத்தில் வகுப்பறையிலேயே மாணவியிடம் அவர் அத்துமீறி நடந்துகொண்டதாக விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: இரவில் வீட்டை விட்டு வெளியே போன 14 வயது சிறுமி! தேடி அழைத்து வந்த பெற்றோர்... விடிந்ததும் வீட்டில் பெற்றோர்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி! நடந்தது என்ன? பகீர் சம்பவம்...!!!

வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை

தொடர்ந்து மாணவியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்ற ஆசிரியர், அங்கு அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு உள்ளது. பின்னர் காலை சுமார் 8.30 மணியளவில் சிறுமியை பள்ளிக்கு அருகே அழைத்து வந்து விட்டுச் சென்றதாகவும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

8 மாதங்களுக்கு பிறகு தாயிடம் கூறிய மாணவி

நடந்தவற்றை நீண்ட நாட்களாக மனதில் வைத்திருந்த மாணவி, சுமார் 8 மாதங்களுக்கு பிறகு தனது தாயிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதையடுத்து அதிர்ச்சியடைந்த தாய் உடனடியாக தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோகித் டாங்கை கைது செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து போலீசார் தகவல்களை சேகரித்து வருகின்றனர்.

 

இதையும் படிங்க: பூஜை என்ற பெயரில் போலி சாமியாரின் அந்தரங்க லீலை! உடலுறவில் இருந்தால் தான் தோஷம் போகும்.. பெற்றோரை ஏமாற்றி 17 வயது சிறுமியை சீரழித்த போலி சாமியார்! இறுதியில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை... கொடூர சம்பவம்!!!