இரவில் வீட்டை விட்டு வெளியே போன 14 வயது சிறுமி! தேடி அழைத்து வந்த பெற்றோர்... விடிந்ததும் வீட்டில் பெற்றோர்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி! நடந்தது என்ன? பகீர் சம்பவம்...!!!



andhra-14-year-old-schoolgirl-death-bhimavaram

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் பீமாவரத்தில் 14 வயது பள்ளி மாணவி வீட்டிலேயே சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அல்லம்வாரி தோட்டா பகுதியைச் சேர்ந்த அந்த மாணவி, அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டை விட்டு வெளியேறிய அவர், மறுநாள் காலையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

இரவில் வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி

ஞாயிற்றுக்கிழமை இரவு சிறுமி திடீரென வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில் அப்பகுதியில் சென்ற ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், சிறுமி தனியாக நடந்து செல்வதை கவனித்துள்ளார். உடனடியாக அவரது தந்தைக்கு தகவல் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கள்ளக்காதல் விவகாரத்தில் கொடூர முடிவு..! பெற்ற தாயை கொன்ற மகள்.. மகனின் வாக்குமூலத்தால் வெளிவந்த அதிர்ச்சி உண்மை..!!!

இதையடுத்து பெற்றோர் அங்கு சென்று சிறுமியை பத்திரமாக வீட்டுக்கு அழைத்து வந்தனர். இரவு நேரத்தில் மகள் வீட்டை விட்டு வெளியேறியதால் குடும்பத்தினர் கவலையில் இருந்ததாக கூறப்படுகிறது.

காலையில் வீட்டுக்குள் சோகமான நிலை

இந்த நிலையில், திங்கள்கிழமை காலை வீட்டுக்குள் சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். இதைப் பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த போலீசார் சிறுமியின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இரவில் வெளியேறியதன் பின்னணி குறித்து விசாரணை

14 வயதே ஆன பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த பீமாவரம் ஒன் டவுன் போலீசார், சிறுமி இரவு நேரத்தில் வீட்டை விட்டு வெளியேறியதற்கான காரணம் என்ன, அதன்பின்னர் வீட்டில் நடந்தது என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுமியின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்தவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பீமாவரம் போலீசார் விசாரணையின் முடிவில் சிறுமியின் உயிரிழப்புக்கான முழுமையான பின்னணி தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இதையும் படிங்க: பூமியில் இருந்து கொப்பளிக்கும் வெந்நீர்... தெலங்கானா கிராமங்களில் வியப்பூட்டும் காட்சி!