2 வயசு தான் ஆகுது..! அப்பாவின் ஆட்டத்தை பார்த்து மகன் செய்த ஆரவாரத்தை பாருங்க..! டெஸ்ட் போட்டியில் 150 ரன்கள் அடித்து அசத்திய தென்னாப்பிரிக்க வீரர்... கியூட் வீடியோ..!!!



marx-ackerman-fastest-south-african-test-150

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க வீரர் மார்க்ஸ் அக்கர்மேன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி புதிய சாதனை படைத்துள்ளார். வெறும் 137 பந்துகளில் 150 ரன்களை எட்டிய அவர், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 150 ரன்கள் எடுத்த தென்னாப்பிரிக்க வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இதற்கிடையே, அவர் ஆட்டமிழந்து வெளியேறியபோது பார்வையாளர் மாடத்தில் இருந்த அவரது 2 வயது மகன் உற்சாகமாக கைதட்டிய காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

137 பந்துகளில் 150 ரன்கள்.. புதிய சாதனை

செஞ்சூரியன் மைதானத்தில் வங்கதேசத்துக்கு எதிராக நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் மார்க்ஸ் அக்கர்மேன் அதிரடியாக விளையாடினார். 138 பந்துகளை எதிர்கொண்ட அவர், 23 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்களுடன் 150 ரன்கள் குவித்தார். 137 பந்துகளில் 150 ரன்களை எட்டியதன் மூலம் தென்னாப்பிரிக்க டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்தார். அவரது அதிரடி ஆட்டம் ஷோரிபுல் இஸ்லாம் பந்துவீச்சில் முடிவுக்கு வந்தது.

இதையும் படிங்க: அந்த 30 நிமிட பேச்சால் அதிர்ந்து போன ஆடுகளம்..! அந்த சாரின் ஒவ்வொரு அறிவுரையும் இன்றைய இன்னிங்ஸில் உதவியது..! உலக சாதனை ரகசியத்தை போட்டு உடைத்த வைபவ் சூர்யவன்ஷி..!!!

தந்தையின் ஆட்டத்தை பார்த்து உற்சாகத்தில் மகன்

அக்கர்மேன் ஆட்டமிழந்து மைதானத்தை விட்டு வெளியேறியபோது, பார்வையாளர் மாடத்தில் இருந்த அவரது 2 வயது மகன் ஜாக் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். தென்னாப்பிரிக்க அணியின் வெள்ளை நிறச் சீருடை அணிந்திருந்த அந்தக் குழந்தை, தந்தையைப் பார்த்து இரு கைகளையும் உயர்த்தி உற்சாகமாக கைதட்டி மகிழ்ந்தது.

தொலைக்காட்சி கேமராவில் பதிவான இந்தக் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. தந்தையின் சாதனை ஆட்டத்தைக் கொண்டாடும் மகனின் அழகான தருணம் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து 2-வது சதம்.. வலுவான நிலையில் தென்னாப்பிரிக்கா

30 வயதான அக்கர்மேன், கடந்த வாரம் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 157 ரன்கள் எடுத்திருந்தார். தற்போது இரண்டாவது டெஸ்டிலும் சதத்தைப் பதிவு செய்து தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

அவரது ஆட்டத்தின் உதவியுடன் 2-வது நாள் முடிவில் தென்னாப்பிரிக்க அணி 7 விக்கெட் இழப்புக்கு 494 ரன்கள் குவித்துள்ளது. இதனால் வங்கதேச அணியை விட 403 ரன்கள் முன்னிலையில் தென்னாப்பிரிக்கா வலுவான நிலையில் உள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் டெஸ்ட் அறிமுகம் பெற்ற அக்கர்மேன், தனது முதல் 4 டெஸ்ட் போட்டிகளிலும் தலா 50 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். இதன்மூலம் தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர்களான பேரி ரிச்சர்ட்ஸ், ஆண்ட்ரூ ஹட்சன் ஆகியோருக்குப் பிறகு, முதல் 4 டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து 50 ரன்களுக்கு மேல் குவித்த மூன்றாவது வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

 

இதையும் படிங்க: அதிரடி ஆட்டம்..! வெறும் 53 பந்துகளில் 204 ரன்கள்... இரட்டைச் சதம் அடித்து பிரம்மாண்ட உலக சாதனை படைத்தது எப்படி தெரியுமா..? உண்மையை உடைத்த வைபவ் சூரியவன்சி..!!!