இப்படி நடக்கும்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கல! சிரித்த முகத்துடன் பேசிய தன்ஷிகாவிற்குள் இவ்வளவு சோகமா?



vishal-dhanshika-marriage-news

2004ஆம் ஆண்டு வெளியாகிய செல்லமே திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் நாயகனாக அறிமுகமானார் விஷால். அதன் பிறகு சண்டக்கோழி திரைப்படம் அவரது நடிப்பு வாழ்க்கையில் முக்கிய முன்னேற்றமாக அமைந்தது.

இவற்றின் வெற்றியை தொடர்ந்து, திமிரு, தாமிரபரணி, அவன் இவன், பாண்டிய நாடு, பூஜை, துப்பறிவாளன் உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். மேலும், துப்பறிவாளன் 2 மூலம் இயக்குனராகவும் மாறியுள்ளார்.

விஷால் திருமணம்​​​​​​

சமீபமாக விஷால் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஓய்வில் இருக்கிறார். இதனால் அவரைச் சுற்றிய பல தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பரவி வருகின்றன.

இதையும் படிங்க: பசங்க பட நடிகர் ஸ்ரீராமுக்கு டும்டும்டும்! குவியும் வாழ்த்துக்கள்..

சமீபத்தில் திருநங்கை அழகுராணி போட்டிக்கு சென்ற போது விஷால் மயக்கமடைந்த சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருமணம் குறித்து விஷால் அளித்த விளக்கம்

விஷால் திருமணம்

இந்த பரபரப்புக்கிடையே, ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் திருமணம் குறித்த திட்டங்களை பகிர்ந்தார் விஷால். அதன்பின் ஒரு திரைப்பட விழாவில், தன்ஷிகாவுடன் இணைந்து திருமணம் நடைபெறும் தேதியை அறிவித்தார்.

அத்துடன், தனது வருங்கால மனைவிக்கு நிச்சயித்த சத்தியங்கள் மற்றும் காதல் பயணத்தைப் பற்றியும் பேசினார்.

விஷால் திருமணம்

தன்ஷிகா பகிர்ந்த உணர்ச்சி

தன்ஷிகா சமீபத்திய பேட்டியில், “திருமணத்திற்கு முன்னால் உள்ள 2 மாதங்களில் நாங்கள் பேசிப் பழகலாம் என எண்ணினேன். ஆனால் அது சாத்தியமாகவில்லை. விஷால் போன்ற ஒரு நடிகருடன் இது சாத்தியம் தான் என்று நான் நம்பவில்லை” எனக் கூறினார்.

அவரது புன்னகையுடனான இந்தப் பேட்டி ரசிகர்களிடையே மிகுந்த கவனத்தை பெற்றுள்ளது. சிலர் “கல்யாண பொண்ணுக்குள்ள சோகம் தெரியுது” என மகிழ்ச்சியோடு கலாய்ப்பு கருத்துக்களை பகிர்ந்துவருகின்றனர்.

 

இதையும் படிங்க: எல்லாரும் வந்துட்டாங்க எடுங்க... சித்தார்த்தை நைஸாக கழட்டி விட்ட சரத்குமார்! அசிங்கப்பட்டு வெளியேறினாரா? வைரல் வீடியோ....