BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
அதிசயம் ஆனால் உண்மை! எமனையே ஏறி மிதிச்ச 33 வயது இளையர்.... நுரையீரலே இல்லாம 48 மணி நேரம் உயிருடன்! அடுத்து நடந்த மெடிக்கல் மிராக்கிள் சம்பவம்!
நவீன மருத்துவத்தின் அபார முன்னேற்றத்தை வெளிப்படுத்தும் வகையில் அமெரிக்காவில் நடந்த ஒரு சம்பவம் உலகம் முழுவதும் கவனம் ஈர்த்துள்ளது. கடுமையான உடல்நலக் கோளாறுகளை எதிர்கொண்டு, நுரையீரல் இல்லாமலேயே உயிர் வாழ்ந்த இளைஞரின் போராட்டம் மருத்துவ வரலாற்றில் புதிய அத்தியாயமாக மாறியுள்ளது.
கடுமையான சுவாச கோளாறு ஏற்படுத்திய நெருக்கடி
33 வயது இளைஞருக்கு ஏற்பட்ட தீவிர சுவாச பாதிப்பு காரணமாக, அவரது இரண்டு நுரையீரல்களும் முற்றிலும் செயலிழந்தன. உயிரைக் காக்க வேறு வழியின்றி, மருத்துவர்கள் அவற்றை அகற்றும் கடுமையான முடிவை எடுத்தனர். பொதுவாக மனிதன் நுரையீரல் இல்லாமல் உயிர் வாழ முடியாது எனக் கருதப்படும் நிலையில், இது பெரும் சவாலாக அமைந்தது.
நுரையீரல் இல்லாமல் 48 மணி நேரம்
அறுவை சிகிச்சைக்குப் பிறகு, மெடிக்கல் மிரக்கிள் எனப் பேசப்படும் அளவுக்கு, நவீன மருத்துவ கருவிகளின் துணையுடன் அந்த இளைஞர் சுமார் 48 மணி நேரம் நுரையீரல் இன்றி உயிருடன் இருந்தார். இதற்கிடையில் பொருத்தமான உறுப்பு தானம் செய்பவரை மருத்துவர்கள் தீவிரமாக தேடினர்.
வெற்றிகரமான மாற்று அறுவை சிகிச்சை
உறுப்பு தானம் செய்பவர் கிடைத்தவுடன், மருத்துவ குழு உடனடியாக நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொண்டது. சிக்கலான இந்த சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்ததைத் தொடர்ந்து, இளைஞரின் உடல்நிலை மெதுவாக சீரடைந்தது.
மரணத்தின் விளிம்பில் இருந்து மீண்ட அவர் தற்போது புதிய நுரையீரல்களுடன் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம், Organ Donation முக்கியத்துவத்தையும், நவீன மருத்துவத்தின் எல்லையற்ற வளர்ச்சியையும் உலகிற்கு மீண்டும் நினைவூட்டுகிறது.
இதையும் படிங்க: 30 வயது பெண்ணுக்கு விபத்தில் துண்டான காது!அந்த காதை காலில் வைத்து தைத்த மருத்துவர்கள்! இதுதான் காரணமா? சவாலான சிகிச்சை சம்பவம்..!!!