காவாலா பாட்டு எல்லாம் ஓரம் போ!! வந்துட்டா மோனிகா.. வைரலாகும் லேட்டஸ்ட் பாடல்.
என்னவோ போ.. மனவேதனையை போஸ்ட்டில் கொட்டி தீர்த்த ஆர்த்தி ரவி! வைரலாகும் பதிவு.! ரசிகர்களின் கருத்துக்கள்...

விவாகரத்து சர்ச்சைக்கு பிறகு ஆர்த்தி பகிறும் பதிவுகள் தொடர்ந்து இணையத்தில் வழக்கமாக வைரலாகி வருகின்றன. தற்போது அந்த வகையில் ஒரு புதிய பதிவு சமூக வலைத்தளங்களில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது.
நடிகர் ரவிமோகனின் பெயர் மாற்றம் மற்றும் குடும்ப விவகாரம்
தமிழ் சினிமாவில் ஜெயம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி பிரபலமானவர் ரவிமோகன், பின்னாளில் ஜெயம் ரவி என பெயர் மாற்றம் செய்திருந்தார். ஆனால் சில மாதங்களுக்கு முன்னர், அவர் மீண்டும் தனது பெயரை ரவிமோகன் என மாற்றினார். கடந்த ஆண்டு முதல், அவருடைய குடும்ப பிரச்சனைகள் ஊடகங்களில் பரபரப்பாக வெளியானது.
ஆர்த்தியின் வெளியான அறிக்கையால் பரபரப்பு
ரவிமோகனுடன் காதலித்து திருமணம் செய்த ஆர்த்தி, தங்களை விவாகரத்து செய்ய உள்ளதாக வெளியிட்ட அறிக்கையால் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார். அதன்பின், இருவரையும் சார்ந்த செய்திகள் தொடர்ந்து வெளிவந்து வருகின்றன
இதையும் படிங்க: ஜமீன் பரம்பரை! சினிமாவால் இன்றோ பரிதாப நிலை! யார் அந்த நடிகர் தெரியுமா?
மகனுக்காக இணைந்த பெற்றோர்
இந்நிலையில், ரவிமோகனின் மூத்த மகன் ஆரவ் பிறந்த நாளை கொண்டாடிய தினத்தில், இருவரும் மகனுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்தனர். இந்த குடும்பக் கவனம் இணையவாசிகளை நெகிழச் செய்தது.
ஆர்த்தியின் உணர்ச்சி கொண்ட பதிவு
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஆர்த்தி ரவி தனது மகன்கள், தயார் மற்றும் நண்பர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்துள்ளார்.
"எங்க இருக்கோம், எங்கயோ இருக்கோம் ஆர்த்தி அக்கா" என பதிவிட்டிருந்தார். இந்த பதிவை தனது ஸ்டோரியில் பகிர்ந்த ஆர்த்தி " என்னவோ... போ" என உணர்ச்சி மிகுந்த பதிலைக் கொடுத்துள்ளார்.
ரசிகர்களின் கருத்துகள்
இந்தப் பதிவை பார்த்த ரசிகர்கள், "இரண்டு குழந்தைகளையும் தனியாக வளர்ப்பது சவாலானது. ஆனாலும் கைவிட்ட கணவனை நினைக்கும் பொழுது அவருக்கு வேதனை இருக்கிறது…" என தனது உணர்வுகளை பகிர்ந்துள்ளனர்.
இதையும் படிங்க: பழனிமுருகன் கோவிலில் மகன்களுடன் அஷ்டாங்க நமஸ்காரம் செய்த நயன்தாரா- விக்கி! வைரலாகும் புகைப்படங்கள்...