என்னை விட்ருங்க.... நடுரோட்டில் அழுது ஆர்ப்பாட்டம் செய்த இன்ஸ்பெக்டர் ! லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாக பிடித்த அதிகாரிகள்! வைரலாகும் வீடியோ!
பெங்களூருவில் நிகழ்ந்த ஒரு அதிர்ச்சி சம்பவம், காவல் துறையின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக மாற்றியுள்ளது. லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக சிக்கிய காவல் ஆய்வாளர் ஒருவர் நடுரோட்டில் அழுது ஆர்ப்பாட்டம் செய்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு பெரும் விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது.
லஞ்சம் வாங்கியபோது அதிரடி கைது
கர்நாடக மாநிலம் கே.பி. அக்ரஹாரா காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வந்த கோவிந்தராஜு என்பவர், ஒரு ரியல் எஸ்டேட் தொழிலதிபரை மோசடி வழக்கிலிருந்து விடுவிக்க 5 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த அந்த தொழிலதிபர் லோக் ஆயுக்தா போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கோவிந்தராஜுவிடம் கொடுத்தபோது மறைந்திருந்த அதிகாரிகள் அவரை உடனடியாக கைது செய்தனர். இந்த அதிரடி நடவடிக்கை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: லஞ்சம் வாங்கிய வட்டாச்சியார்.. அடுத்து நடந்ததுதான் ட்விஸ்ட்...
கைது நேரத்தில் குழந்தை போல அழுகை
கைது செய்யப்பட்டதும், தனது தவறை ஒப்புக்கொண்டு வருந்துவதற்குப் பதிலாக, ஆய்வாளர் கோவிந்தராஜு நடுரோட்டில் நின்று "என்னை விட்டுவிடுங்கள்" என்று கெஞ்சியபடி ஒரு குழந்தையைப் போல சத்தமாக அழுதார். அவரது இந்த லஞ்சம் கைது சம்பவம் அங்கிருந்த பொதுமக்களையும் அதிகாரிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வைரல் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி கடும் விமர்சனங்களை எழுப்பி வருகின்றன.
காவல் துறைக்கு விழுந்த நம்பிக்கை கீறல்
சட்டத்தை காக்க வேண்டிய உயர் அதிகாரியே இவ்வாறு லஞ்சத்தில் சிக்கியது, பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
இந்த சம்பவம், அதிகாரிகளின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை அவசியம் என்பதையும், சட்டத்தின் முன் யாரும் பெரியவர் அல்ல என்பதையும் மீண்டும் நினைவூட்டும் ஒரு கடும் எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: மாற்றுத்திறனாளிப் பெண்ணிடம் அருவருப்பாக நடந்து கொண்ட போலீஸ் அதிகாரி! தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்? வைரல் வீடியோ!