கோதுமை புல் சாறு: தயாரிப்பது எப்படி? பயன்கள் என்ன?..!
கல்லீரலின் ஆரோக்கிய செயல்பாட்டுக்கு கோதுமை புல் சாறினை தினமும் குடித்து வந்தால், உடலில் தேங்கும் கழிவுகள் வெளியேறி உடல் நலம்பெறும். கோதுமை புல் சாறு கோதுமை விளையும் பகுதிகளில் வீட் கிராஸ் ஜூஸ் என்ற பெயரில் கிடைக்கிறது. கோதுமை புல்லை வீட்டில் வளர்த்து, அதனை சாறாக தயார் செய்து குடிக்கலாம். அதனுடன் சுவைக்காக சில சாறுகளை கலந்தும் பருகலாம்.
தேவையான பொருட்கள்:
கோதுமை புல் - ஒரு கைப்பிடி,
லெமன் சாறு - 1 கரண்டி,
இஞ்சி - சிறிய துண்டு.
செய்முறை:
முதலில் எடுத்துக்கொண்ட இஞ்சியை தோல் நீக்கி, பொடிப்பொடியாக நறுக்கி வைத்து கொள்ள வேண்டும். பின்னர், மிக்சியில் கோதுமை புல்லை போட்டு, இஞ்சி சேர்த்து தண்ணீர் விட்டு அரைக்க வேண்டும்.
அரைத்த விழுதை வடிகட்டி, அதனோடு எலுமிச்சை சாறு மற்றும் நாட்டு சர்க்கரை சேர்த்து குடிக்கலாம்.