நடிகர் விஜய் ஆண்டனிக்கு இப்படியொரு வித்தியாசமான பழக்கமா?? அதற்கு இதுதான் காரணமா!! அவரே சொன்ன விளக்கம்!!



actor-vijay-antony-share-the-reason-of-not-wearing-chep

சுக்கிரன் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. தொடர்ந்து தனது புதுமையான இசையால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். பின்னர் நான் படத்தின் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்த அவர் தொடர்ந்து சலீம், பிச்சைக்காரன், சைத்தான், ரத்தம், ஹிட்லர் உள்ளிட்ட படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியுள்ளார்.

மேலும் இறுதியாக விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த மார்கன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் அவரது நடிப்பில் உருவாகியுள்ள சக்தி திருமணம் திரைப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இந்த நிலையில் அண்மையில் பேட்டி ஒன்றில் நடிகர் விஜய் ஆண்டனி சமீப காலமாக தான் செருப்பு அணியாமல் இருப்பது ஏன் என்பது குறித்து பகிர்ந்துள்ளார்.

vijay antony

அவர் கூறியதாவது, செருப்பு கழற்றி வெறும் காலுடன் நடக்கும்போது மனம் நிறைவாக உள்ளது. இந்த பூமிக்கும் நமக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. பிரபலமாக இருப்பதால் விமான பயணம், ஏ.சியில் உறக்கம், பங்களா வீடு போன்ற ஆடம்பரங்கள் ஒட்டிவிடுகிறது. நாம் ஆசைப்பட்டாலும் அதையெல்லாம் விட முடியாது. செருப்பு அணியாமல் இருப்பது போன்ற செயல்களில் ஈடுபடுத்திகொண்டு எனது மனதை பக்குவப்படுத்தி கொள்கிறேன். ஆனால் வெப்பமான பகுதிகளில், முட்கள் உள்ள காட்டுப்பகுதிகளில், மலைப்பகுதிகளில் செல்லும்போது செருப்பு அணிந்துகொள்வேன் என கூறியுள்ளார்.

இதையும் படிங்க: அம்மாடியோவ்... ஒரு நொடிக்கு ரூ.10 லட்சம் சம்பளம் வாங்கிய பிரபல தமிழ் நடிகை! யார் தெரியுமா?

இதையும் படிங்க: மகாநதி சீரியல் இயக்குனர் தனது படப்பிடிப்பு முடிந்ததாக போட்ட பதிவு! அதிர்ச்சியில் ரசிகர்கள்...