அம்மாடியோவ்... ஒரு நொடிக்கு ரூ.10 லட்சம் சம்பளம் வாங்கிய பிரபல தமிழ் நடிகை! யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் நடிக்கும் நடிகர்களும் நடிகைகளும் இன்றைய சூழ்நிலையில் அதிகமான சம்பளங்களை பெற்றுக் கொண்டிருக்கின்றனர். வெறும் திரைப்படங்களே அல்லாமல், விளம்பரங்களிலும் அவர்களுக்கு ஏராளமான வருமான வாய்ப்புகள் அமையக்கூடிய சூழல் உருவாகியுள்ளது.
ஒரு நொடிக்கு 10 லட்சம் சம்பளம் பெறும் நடிகை
இந்நிலையில், ஒரு நொடிக்கு ரூ. 10 லட்சம் சம்பளம் வாங்கிய ஒரு முன்னணி தமிழ் நடிகையின் பெயரை கேட்டால், நம்மில் பலருக்கும் ஆச்சரியமே உண்டாகும். ஆம், அவர் வேற யாரும் இல்லை நடிகை நயன்தாரா தான்.
டாடா ஸ்கை விளம்பரத்தில் நயன்தாரா
டாடா ஸ்கை நிறுவனத்தின் விளம்பர ஒப்பந்தத்தில் நயன்தாரா இணைந்துள்ளார். இந்த விளம்பரம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட நான்கு முக்கிய மொழிகளில் தயாரிக்கப்பட்டது. இதற்கான படப்பிடிப்பு சுமார் இரண்டு நாட்கள் நடைபெற்றுள்ளது.
இதையும் படிங்க: இந்த டிவி சீரியல்னா நயன்தாராவுக்கு ரொம்ப பிடிக்குமாம்! அவரே விரும்பி பார்க்கும் அந்த சீரியல் எது தெரியுமா?
ஒரு விளம்பரத்துக்கு ரூ. 5 கோடி சம்பளம்
தற்போதுள்ள தகவல்களின் படி, சுமார் 50 வினாடிகள் கொண்ட இந்த விளம்பரத்திற்கு நயன்தாரா ரூ. 5 கோடி சம்பளமாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனைக் கொண்டு பார்க்கும்போது, ஒரு வினாடிக்கு ரூ. 10 லட்சம் என்பது வெளிப்படையாக தெரியவருகிறது.
நயன்தாராவின் மார்க்கெட் மதிப்பு
இந்த செய்தி மூலம் நயன்தாராவின் விலையுயர்ந்த மார்க்கெட் மதிப்பும், தமிழ் சினிமாவில் அவரது தனித்துவமான இடமும் தெளிவாகிறது. இது மற்ற நடிகைகள் மற்றும் நடிகர்களுக்கும் பெரும் ஊக்கத்தையும் இலக்காகும் நிலையையும் அளிக்கக்கூடியதாகும்.
இதையும் படிங்க: அட.. நயன்தாராவுக்கு ரொம்ப பிடித்த சீரியல் இது தானாம்! மிஸ் பண்ணமா தினமும் பார்த்துடுவாங்கலாம்!