இந்த டிவி சீரியல்னா நயன்தாராவுக்கு ரொம்ப பிடிக்குமாம்! அவரே விரும்பி பார்க்கும் அந்த சீரியல் எது தெரியுமா?

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் புகழப்படும் நயன்தாரா, சினிமாவில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும், குடும்பத்தையும் தனிப்பட்ட நேரத்தையும் முக்கியமாகக் கருதி வாழும் நடிகை. தற்போது இவருக்கு பிடித்தமான டிவி சீரியல் குறித்த சுவாரசியமான தகவல் இணையத்தில் பரவி வருகிறது.
குடும்ப வாழ்க்கையிலும் மகத்தான கவனம்
20 ஆண்டுகளுக்கு மேல் முன்னணி நடிகையாக விளங்கும் நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்டு, இரு குழந்தைகளுடன் குடும்ப வாழ்க்கையை இனிதே நடத்தி வருகிறார். திருமணத்திற்கு பிறகும் பிசியாக நடித்து வரும் இவர், சமீபத்தில் டெஸ்ட் படத்திலும் நடித்தார். தற்போது, மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
பாலிவுட்டிலும் வெற்றி பெற்ற நடிகை
ஜவான் திரைப்படத்தின் மூலம் ஹிந்தி திரையுலகிலும் நுழைந்த நயன்தாரா, அந்த படத்தின் பெரும் வெற்றியால் பாலிவுட்டிலும் இடம்பிடித்துள்ளார். இந்த படம் ₹1000 கோடிக்கு மேல் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது. தமிழில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் இவர் பெயர் பெற்றுள்ளார்.
இதையும் படிங்க: அட.. நயன்தாராவுக்கு ரொம்ப பிடித்த சீரியல் இது தானாம்! மிஸ் பண்ணமா தினமும் பார்த்துடுவாங்கலாம்!
நயன்தாரா ரசிக்கும் சீரியல் கயல்
இந்நிலையில், நயன்தாரா சன் டிவியில் ஒளிபரப்பாகும் "கயல்" சீரியலை மிக விருப்பமாக பார்த்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக ஒளிபரப்பாகும் இந்த சீரியல், சஞ்சீவ் மற்றும் சைத்ரா ரெட்டி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ஒரு எபிசோடும் மிஸ் செய்யாமல் நயன்தாரா இந்த சீரியலை பார்ப்பாராம், இது பலருக்கே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அட.. நயன்தாராவுக்கு ரொம்ப பிடித்த சீரியல் இது தானாம்! மிஸ் பண்ணமா தினமும் பார்த்துடுவாங்கலாம்!