AVM சரவணன் காலமானார்! முதல் ஆளாக கண்ணீர் அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்! பெரும் சோகம்..!!
மகாநதி சீரியல் இயக்குனர் தனது படப்பிடிப்பு முடிந்ததாக போட்ட பதிவு! அதிர்ச்சியில் ரசிகர்கள்...
மகாநதி சீரியல் என்பது இளைஞர்கள் மற்றும் குடும்ப ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக பரவலாக பார்க்கப்படும் ஒரு முக்கியமான விஜய் டிவி தொடராக உள்ளது. பிரவீன் பென்னட் இயக்கத்தில், குளோபல் வில்லேஜர்ஸ் தயாரிப்பில் உருவான இந்த தொடரின் முக்கிய கதைக்களம் நான்கு அக்கா-தங்கைகளின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு நகர்கிறது.
கதையின் தற்போதைய சூழ்நிலை
தற்போது மகாநதி தொடரில் வெண்ணிலா, அவரது மாமா மற்றும் பசுபதி ஆகிய மூவரும் முக்கிய திருப்புமுனையில் உள்ளனர். இவர்களில் யாராவது ஒருவர் உண்மையை வெளிப்படுத்தினாலே விஜய் சிறையிலிருந்து வெளியே வர முடியும் என்ற கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது.
இதனிடையே காவேரி, விழித்தெழும் வெண்ணிலாவை சந்திக்கிறார். அவர் விஜயை வெளியே கொண்டு வந்தால், தனது வாழ்க்கையிலிருந்து நிச்சயமாக விலகுவதாக உறுதி கூறுகிறார். இது தொடரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மகாநதி சீரியல் ரசிகர்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்! எதிர்பார்பில் ரசிகர்கள்....
பிரவீன் பென்னட் வெளியிட்ட கேக் போட்டோ பகிர்வு
வழக்கம்போல தனது படப்பிடிப்பு அப்டேட்களை பகிரும் பிரவீன் பென்னட், சமீபத்தில் ஒரு கேக் போட்டோவை வெளியிட்டார். அதில் படப்பிடிப்பு முடிந்தது எனக் குறிப்பிட்டிருந்தார். இதைப் பார்த்த ரசிகர்கள் மகாநதி சீரியல் முடிவுக்கு வந்துவிட்டதா என பதறினர்.
ஆனால் உண்மையில் அது மகாநதி தொடர் அல்ல. ஜியோ ஹாட்ஸ்டார்க்கு இயக்கியுள்ள புதிய வெப் தொடர் படப்பிடிப்பு முடிவைச் சொல்வதற்காகவே அந்த பதிவை அவர் பகிர்ந்துள்ளார் என்பது பின்னர் தெரியவந்தது.
இதையும் படிங்க: மகாநதி சீரியல் ரசிகர்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்! எதிர்பார்பில் ரசிகர்கள்....