மகாநதி சீரியல் ரசிகர்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்! எதிர்பார்பில் ரசிகர்கள்....

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியல், இளைஞர்கள் மற்றும் குடும்ப பார்வையாளர்களின் மனதை வென்றுவரும் ஒரு பிரபல தொடர் ஆகும். ஆரம்பத்தில் இது நான்கு அக்கா தங்கைகளின் வாழ்வை மையமாகக் கொண்ட கதைதான். ஆனால் தற்போது, விஜய் மற்றும் காவேரி ஆகிய இருவரின் காதல் மற்றும் உணர்வுப் போராட்டங்களாக மாறியுள்ளது.
விஜய் காவேரி காதல்
பொதுவாகவே ரசிகர்கள், "விஜய் மற்றும் காவேரி எப்போது சந்தோஷமாக இணைவார்கள்?" என்ற எதிர்பார்ப்போடு உள்ளனர். அண்மையில் காவேரி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட, தற்போது விஜய் என்பவர் அம்மை நோயால் தனிமையில் வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில், காவேரி நேரடியாக விஜய் இருக்கும் இடத்துக்கே சென்று அவரை பார்த்துக்கொள்ள தன்னலமின்றி செயலில் இறங்குகிறார்.
யமுனா கதாபாத்திரத்தில் மாற்றம்
இந்த தொடரில் யமுனா பாத்திரத்தில் நடித்த ஆதிரை, சில தனிப்பட்ட காரணங்களால் தொடரிலிருந்து விலகியுள்ளார். இது ரசிகர்களிடம் சிறிது ஏமாற்றத்தை ஏற்படுத்தினாலும், கதை சிறப்பாகவே தொடர்கிறது
இதையும் படிங்க: சீதா திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட முத்துவை அசிங்கப்படுத்தும் அருண்! சிறகடிக்க ஆசை புரொமோ வீடியோ..
கடந்த ஞாயிற்றுக்கிழமை, அய்யனார் துணை சீரியல் ஒரு சிறப்பு எபிசோடாக ஒளிபரப்பானது. இந்த வாரம் அதற்குப் பதிலாக மகாநதி சீரியல் தான் விஜய் டிவியின் சூப்பர் ஹிட் ஞாயிறு சிறப்பு எபிசோடாக வரவிருக்கிறது. இது ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது
.
இதையும் படிங்க: விஜயா சீரியலில் இறக்கப் போகிறாரா? தனுக்கு தானே படையல் போட்ட சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை! பார்த்து பதறிப்போன நெட்டிசன்கள்....