ஜிம்மில் தீயாய் ஒர்க் அவுட் செய்யும் அட்டக்கத்தி நாயகி.! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!!
வீட்டைவிட்டு வெளியேறி அம்மா வீட்டுக்கு போன மீனா! விடிந்ததும் முத்து விஜயாவிற்கு கொடுத்த ஷாக்! சிறகடிக்க ஆசை புரோமோ...
சிறகடிக்க ஆசை தொடர் விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் புகழ்பெற்ற சீரியல்களில் ஒன்றாக இருக்கிறது. குடும்பம் மற்றும் உறவுப் பின்னணியில் இடம்பெறும் திருப்பங்களால், இந்த தொடருக்கு பெரும் ரசிகர்கள் ஆதரவு கிடைத்துவருகிறது.
இன்றைய எபிசோட் முக்கியக் காட்சிகள்
இன்றைய எபிசோடில், மீனாவின் மோசடி குறித்து தெரிந்த முத்து மிகவும் கோபமாக இருக்கிறார். "மீனா இனி என் வீட்டிற்கு வரக்கூடாது. அவள் என்னை ஏமாற்றிவிட்டாள்" என கூறுகிறார். அதே நேரத்தில், மீனா வீட்டிற்கு வந்ததும் முத்து அவரது மீதான கோபத்தை வெளிப்படுத்துகிறார்.
அவரை சமாதானப்படுத்த வீட்டில் உள்ளவர்கள் முயற்சி செய்கின்றனர். மீனா தன்னை மன்னிக்கும்படி அனைவரிடமும் கேட்டுக் கொள்கிறார். இருப்பினும், முத்து கடும் கோபத்தில், மீனாவை வீட்டைவிட்டு வெளியேறச் சொல்லி, தானும் வெளியேறுகிறார்.
இதையும் படிங்க: சீதாவின் காதலுக்கு பச்சைகொடியை காட்டிய முத்து! திடீர் திருப்பத்திற்கு காரணம் என்ன? சிறகடிக்க ஆசை புரோமொ வீடியோ..
மனோஜ் ரோஹினி மீனாவை தாக்கும் காட்சி
இடையில் மனோஜ் மற்றும் ரோஹினி மீனாவை வார்த்தையால் தாக்க, ஸ்ருதி மற்றும் ரவி அவர்களுக்கு பதிலடி கொடுத்து சரியான விளக்கம் அளிக்கின்றனர். இது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாளைய புரொமோவில்
புரொமோவில், ரோஹினி கொடுத்த காபியை குடித்த பிறகு விஜயா துப்பி, "வீட்டில் இருந்த வேலைக்காரியிடம் கற்றுக்கொள்" என கோபமாக பேசுகிறார். இதைக் கேட்ட முத்து, "அவள் வேலைக்காரி இல்லை, என் மனைவி" என கூற, விஜயா அதிர்ச்சியில் உறைகிறார்.
இந்த காட்சி, நாளைய எபிசோடில் இன்னும் பல பரபரப்புகள் எதிர்பார்க்கலாம் என்பதை உணர்த்துகிறது.
இதையும் படிங்க: விஜயா சீரியலில் இறக்கப் போகிறாரா? தனுக்கு தானே படையல் போட்ட சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை! பார்த்து பதறிப்போன நெட்டிசன்கள்....