சீதாவின் காதலுக்கு பச்சைகொடியை காட்டிய முத்து! திடீர் திருப்பத்திற்கு காரணம் என்ன? சிறகடிக்க ஆசை புரோமொ வீடியோ..

பிரபல விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல், ஆரம்பத்திலிருந்தே அதிக ரசிகர்களை ஈர்த்து வருகிறது. முத்து மற்றும் மீனா ஆகிய இருவரை மையமாகக் கொண்டு நகரும் கதை, இப்போது சீதா மற்றும் அருணின் காதலையும் இணைத்து ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறது.
சிறகடிக்க ஆசை சீரியலில் தற்போது பரபரப்பான திருப்பம் ஒன்று இடம்பெற்று வருகிறது. புதிய ப்ரொமோவில், சீதாவின் காதலுக்கு முத்து பச்சைக்கொடி காட்டும் காட்சி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ரோகினியின் திட்டம் தோல்வி
வீட்டில் பொய் கூறி வந்த ரோகினி, மனோஜ் மற்றும் விஜயாவால் ஒதுக்கப்பட்ட நிலையில், இப்போது ஒரு திருட்டுச் செயின் சம்பவம் மூலம் விஜயாவிடம் மாட்டிக் கொண்டுள்ளார். இது கதையை மேலும் பரபரப்பாக்குகிறது.
இதையும் படிங்க: விஜயா சீரியலில் இறக்கப் போகிறாரா? தனுக்கு தானே படையல் போட்ட சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை! பார்த்து பதறிப்போன நெட்டிசன்கள்....
முத்துவின் மாற்றம் ரசிகர்களை கவர்கிறது
சீதா, “அருண் தான் எனக்கு வேண்டும்” என நேரடியாக கூறும் காட்சி ப்ரொமோவில் இடம்பெற்றுள்ளது. இதையடுத்து, முத்து மனம் மாறியுள்ளதுபோல் காட்சி அமைகிறது. அருணின் குடும்பத்தை பெண் பார்க்க வருமாறு சீதாவிடம் கூறியதும், குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
இதையும் படிங்க: சீதாவிற்கு திருமணம் செய்து வைத்த மீனா! திடீரென வந்து நின்ற முத்து! இனி இதுதான் நடக்கபோகுதா! சிறகடிக்க ஆசை புரோமொ வீடியோ...