பிரமாண்டமாக நடிகர் கிங்காங் வீட்டில் நடைபெற்ற விசேஷம்.! நேரில் சென்று வாழ்த்திய தமிழக முதல்வர்!!



actor-kingkong-daughter-marriage

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த அதிசய பிறவி என்ற படத்தில் காமெடி நடிகராக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் சங்கர் என்கிற கிங்காங். உயரம் குறித்த பல ஏளன பேச்சுக்களை கண்டுகொள்ளாமல் தனது திறமையால் முன்னேறிய அவர் தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் 300 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

kingkong

நடிகர் கிங்காங்கிற்கு கலா என்பவருடன் திருமணம் நடைபெற்றது அவர்களுக்கு இரு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் கிங்காங்கின் மூத்த மகள் கீர்த்தனாவிற்கு நவீன் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. அவர்களது திருமணத்திற்காக நடிகர் கிங்காங் பல முன்னணி நடிகர்களையும் நேரில் சந்தித்து பத்திரிக்கை வைத்திருந்தார். 

இதையும் படிங்க: திருமணம் அப்போதுதான்.. ஓப்பனாக போட்டுடைத்து நடிகை சதா சொன்ன விஷயம்.! ரசிகர்கள் ஷாக்!!

kingkong

நேற்று நடிகர் கிங்காங் மகள் திருமணம் அசோக் பில்லர் பகுதியில் இருக்கும் மஹாலில் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. பின்னர் நடைபெற்ற திருமண வரவேற்பு விழாவில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி உள்ளார். அதுகுறித்த புகைப்படங்கள் வைரலாகியுள்ளது.

இதையும் படிங்க: தனுஷ் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்!? 12 ஆண்டுகளுக்கு பிறகு வந்த இன்பசெய்தி.!!